சென்னை, ஆகஸ்ட் 17, 2022

மக்கள் நீதி மய்யம் அறிக்கையின் பதிவு
மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியை சேர்ந்த நரிக்குறவப் பெண் அஸ்வினி கடந்த ஆண்டு கோயிலில் அன்னதானம் சாப்பிடச் சென்றபோது, விரட்டியடிக்கப்பட்டார். இதுகுறித்த வீடியோ வைரலானதையடுத்து, முதல்வரே நேரில் சந்தித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆனால், அவர்களுக்கு இன்னும் தீர்வுகிடைக்கவில்லை.
“மேடையில் கடனுதவி கொடுப்பதுபோல போஸ் கொடுத்தார்கள். ஆனால், கடை இல்லை என்று கூறி, இதுவரை வங்கிக் கடன் தர மறுக்கிறார்கள்” என்று அஸ்வினியும், மற்ற நரிக்குறவர்களும் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், அமைச்சர்களிடம் முறையிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் மத்தியில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், நரிக்குறவர்களுக்கு கடனுதவி கிடைக்கவும், கடை நடத்தவும், வீடு கட்டித் தரவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு, சாமானிய மக்களின் குறைகளைத் தீர்க்க வேண்டுமென மநீம வலியுறுத்துகிறது. – மக்கள் நீதி மய்யம் ஆகஸ்ட் 18, 2022
சென்ற வருடம் ஓர் நரிக்குறவர் குழந்தைக்கு கோவில் ஒன்றில் அன்னதானம் தராமல் தரையில் இலை விரித்து உணவு பரிமாறப்பட்டது காணொளியாக சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனை கண்டு கொண்ட இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சரான பி.கே.சேகர்பாபு அவர்களின் கவனத்திற்கு வரவே மற்ற்றொரு கோயில் ஒன்றில் நரிக்குறவர் பெண்மணியான அஸ்வினி என்பவரை தன்னருகில் அமரவைத்து சமபந்தி போஜனம் மூலம் சாப்பிடச் செய்தார்.
அதன்பிறகு இந்நிகழ்வு குறித்து தமிழக முதல்வரான திரு ஸ்டாலின் அவர்களின் பார்வையில் பாடவும் ஓர் நாள் சம்பந்தப்பட்ட அப்பெண்ணின் வீட்டிற்கு திடீரென (அப்படித்தான் சொல்லிகொள்கிறார்கள்) சென்று உணவருந்தி திமுகவின் திராவிட மாடல் அரசானது சமூக நீதிக்கான ஓர் அரசு எனும்படியாக கூறிக்கொண்டு பின்னர் வேறொரு அரசு விழாவில் நரிக்குறவர் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கடன் அளிக்கும் திட்டமும் வீடு கட்டிக்கொடுக்கும் திட்டமும் அறிவித்து இருந்தார். அவ்விழாவில் அதற்கான அச்சாரமாக கடனளிக்கவிருக்கும் அரசு வங்கியின் காசோலையின் மாதிரி வடிவம் ஒன்றை அப்பெண்மணியிடம் வழங்கிச் சென்றார்.
அதன் பின் அதனைப்பற்றி எந்த மேற்பட்ட தகவல்களும் இல்லாமல் போகவே அப்பெண்மணி ஒவ்வொரு அரசு அலுவலகத்திற்கும் விசாரிக்கச் சென்றுள்ளார் அவ்வங்கியின் கிளைக்கும் சென்று வாக்குறுதி அளிக்கப்பட்டது போல் கடனளிக்குமாறு கேட்டு உள்ளார் அங்கே அவருக்கு உகந்ததாக எந்த பதிலும் அல்லது விளக்கமும் சரியாக வழங்கப்படாமல் அலைகழிக்கபட்டுள்ளார். அது தொடர்பாக அஸ்வினி எனும் அந்த நரிக்குறவர் பெண்மணி மற்றும் அவர்களின் உறவினர்கள் சேர்ந்து தமிழ் ஊடகம் ஒன்றிற்கு காணொளி வாயிலாக நடந்தவற்றை பேசியுள்ளார்கள்.
இதிலிருந்து தெரிவது என்னவெனில் சொல்லியவண்ணம் செயல் என்பதெல்லாம் ஆளும் திமுக அரசுக்கு ஒவ்வாத செயலாக மட்டுமே கருதமுடியும். மேலும் சம்பந்தப்பட்டவர்களிடம் சிரிக்கப் பேசுவதும் தேநீர் அருந்துவதும் உணவு உண்பதும் வெறும் வெற்று விளம்பரத்திற்கு என்று மட்டுமே உணரலாம்.
ஆக, இது தான் திமுக !
கடந்த ஆண்டில் (நவம்பர் 2021) தமிழக முதல்வர் அவர்கள் நரிக்குறவர் பெண்மணியான அஸ்வினி வீட்டிற்கு சென்று வந்த நிகழ்வின் போதான செய்தித்துளிகள்



https://www.vikatan.com/government-and-politics/politics/makkal-needhi-maiam-slams-dmk-government