தமிழகம் ஏப்ரல் 25, 2022
தமிழக அரசு உத்தரவின் பேரில் நேற்று தமிழகமெங்கும் சிறப்பு கிராம சபை சிறப்பாக நடைபெற்றது.
அவ்வகையில் அனைத்து ஊர்களிலும் நடைபெற்ற கிராம சபைகளில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்களின் ஆணைப்படி மய்ய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அங்கே நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று தங்கள் கருத்துகளை முன் வைத்தனர். இத்தகைய நிகழ்வுகளை தமிழகத்தின் பல நாளிதழ்கள் மக்கள் நீதி மய்யம் பங்கெடுத்து கொண்டதை செய்தியாக வெளியிட்டுள்ளது.
மக்களுக்கான அரசியல் முன்னெடுத்து வரும் மக்கள் நீதி மய்யத்தை பாராட்டியது இன்னும் கூடுதலாக உத்வேகத்தை அளிக்கிறது. தனது அரசியல் வாழ்க்கையைத் தொடர்ந்து செய்து வரும் தலைவர் கமல் ஹாஸன் அவர்கள் காணொளி வாயிலாக தனது கருத்துகளை தெரிவித்து நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் கூறினார்.
நாளிதழ்களுக்கு உளமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறது மய்யத்தமிழர்கள்.


