பெரம்பூர் ஜூன் 26, 2022
இயற்கைச் சூழல் என்றும் சிறந்து விளங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இயற்கையை வெல்லவும் எவரும் இல்லை ஆனால் அதே இயற்கையை சிதைத்தோம் என்றால் அதற்கான பலனை நமக்கு தந்தே தீரும்.
இயற்கையை சீரழிப்பதன் பலன் இயற்கைச் சீற்றங்கள், பருவ கால மழை தவறுதல், நிலச்சரிவுகள் இப்படி பல பேரழிவுகள் கடந்த 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி உச்சகட்டம்.
சுற்றளவில் பெரிதாக விரிவாக்கம் செய்யப்படும் நகரங்கள் தனது இயல்பைத் தொலைக்கும் இயற்கையை சிதைத்து வளரும் நவீனம், அடுக்கி வைக்கப்பட்ட தீப்பெட்டிகள் போன்று ஸ்கை ஸ்க்ராப் எனப்படும் ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள் விளைந்து நிற்கும் கான்கிரீட் காடுகள். இந்தக் காடுகளில் கொடிய மிருகங்கள் கிடையாது ஆயினும் பொறாமை, சூது, வாது, கபடுகள் நிறைந்த பல மனிதர்கள் உலவுகின்றனர்.
தெருவினில் இறங்கி நடக்கையில், வாகனங்களில் பயணிக்கையில் சுட்டெரிக்கும் வெயில் ஒதுங்கி நிற்க நிழலுமில்லை, கருநிற தார்ச்சாலைகள், சிமென்ட் தரைகள் சாலை ஓரங்களில் வளர்ந்திருந்த மரங்களும் வெட்டப்பட்டு மீண்டும் நடப்படும் செடிகளை சரிவர பராமரிக்காமல் அவைகள் கருகிப் போய்விடும். பெரும்பாலான வீடுகளும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்காமல் மாடிகளில் இருந்து வழிந்தோடும் நீரை சேமிக்காமல் அதை வீணாக்கி விடுவதும் நடந்து வருகிறது.
இவற்றை எல்லாம் கண்டுணர்ந்த மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் பல பகுதிகளில் செடிகளை நடவு செய்து அவற்றை நீர் ஊற்றி பராமரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதும் அறிந்ததே.
சென்னையின் கான்கிரீட் பகுதிகளில் வாழும் மக்கள் தாங்கள் விருப்பபட்டால் கூட காய்கறி மற்றும் பழங்கள் விளையும் செடி கொடிகளை விதைத்து பராமரித்து வளர்ப்பது என்பது நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று. அதையும் சவாலாக ஏற்று தற்போது இரசாயணக் கலவைகள் எதுவுமின்றி மாடிகளில் சிறு தோட்டங்கள் அமைத்து அவற்றை பராமரித்து வரும் செயலை தற்போது மக்கள் நடைமுறைப்படுத்தமுடியும் என்பதை ஓர் எடுத்துக்காட்டாக தனது வீட்டின் மாடியில் தோட்டம் ஒன்றை அமைத்துள்ளார் மக்கள் நீதி மய்யம், வடசென்னை மாவட்டம் (மத்தி) உள்ளடக்கிய பெரம்பூர் தொகுதி விவசாய அணியைச் சேர்ந்த நிர்வாகி திருமதி அம்ருத மோகனா.
இதற்கான ஓர் நிகழ்வை ஏற்பாடு செய்த அம்ருத மோகனா அவர்களின் அழைப்பை ஏற்று நிகழ்ச்சிக்கு வந்திருந்து சிறப்பித்துத் தந்த வடசென்னை மத்திய மாவட்டச் செயலாளர் திரு V. உதயகுமார் அவர்கள் முன்னிலை வகிக்க மற்றும் உடன் இருந்து விழாவினை சிறப்பித்தனர் மய்ய நிர்வாகிகள்.
இதைப் போன்றே இனி ஒவ்வொரு வீடுகளும் தனது தேவைக்கென வேண்டிய காய்கறிகளை சில மாடித் தோட்டங்களில் விதைத்து பராமரித்து அதன் மூலம் சுத்தமான இரசாயன வேதிப்பொருள் எதுவுமின்றி விளைவித்த காய்கறிகளை (தங்கள் வசதிக்கேற்ப உடன் பொருளாதார வசதிக்கேற்ப) சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
மக்கள் நீதி மய்யம் தனில் மாசடைந்த சுற்றுச் சூழல்களை போதுமான அளவில் தூய்மைப்படுத்தி வர தேவையான மாற்று ஏற்பாடுகள் கொண்ட பல திட்டங்கள் வைத்துள்ளது அதனை செயல்படுத்த வேண்டியதான முயற்சிகளை விரைவில் மேற்கொள்ளும் என அறியப்படுகிறது.
மக்களுக்கான அரசியலை மக்கள் நீதி மட்டுமே சிந்திக்கும் என்பதற்கு இது போன்ற புதிய முயற்சிகள் சான்று.




