ஜனவரி’ 15, 2025
உலகப்பொதுமறை, உரத்த சிந்தனை கொண்ட நூல், வாழ்வின் பிறப்பு, வளர்ச்சி, இறுதியென அனைத்தும் பாடப்பட்டுள்ளது, அதுவும் ஏழே சொற்கள் கொண்ட ஈரடிகளில். உலகின் எந்த மொழியிலும் இல்லாத சிறப்புகள் பலவும் திருக்குறளில் உண்டு. அதனால் தானோ என்னவோ மிக அதிகமான மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு உலகெங்கிலும் வாழ்வியலை போதித்து வருகிறது முறையே ஆன அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என பால்கள் 3, 130 அதிகாரங்களை கொண்ட 1330 குறள் என எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் அமையப்பெற்றது.
தொன்று தொட்டு இன்றைய நாளை அய்யன் திருவள்ளுவரின் நாளாக கடைபிடித்து வருவதால் பொய்யாமொழி புலவரை தன் எழில்மிகு தமிழில் வாழ்த்துகளை சொல்லி இருக்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள்.
“மதங்களைச் சாரா மனிதம் பாடியவர்; வேள்வியிற்சிறந்தது அன்பென்றோதியவர்; யாப்பின் அருங்கல மாலுமியானவர்; மூப்பின் தடமில்லா இளமைச் சொல்லால் உலகுக்கே வழிகாட்டும் அய்யன் வள்ளுவரை வணங்கிப் பணிகிறேன்.” – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

நன்றி : மக்கள் நீதி மய்யம் & செய்திகள் சமூக வலைத்தளம்