புதுக்கோட்டை – ஆகஸ்ட் 11, 2022
புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கிவரும் அரசு உயர் துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு போதுமான கவனத்துடன் கல்வியை போதிப்பதில் உண்டாகும் தாமதத்தினால் கற்பதில் இடையூறு நேர்கிறது. எனவே மக்கள் நீதி மய்யம் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் திரு ஜெய் பார்த்தீபன் அவர்களின் தலைமையில் பெற்றோர்கள் சாலையில் அமர்ந்து மாணவர்களின் கல்விக்கு சரியான முன்னேற்பாடுகளை செய்யாமல் அசட்டையாக இருக்கும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளையும் கண்டித்து தர்ணா செய்தனர். இதற்கு முன்பாக அதி நவீன வசதிகளை உடைய ஸ்மார்ட் கிளாஸ், மின்சார விளக்குகளையும் பள்ளியில் கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்தித் தந்துள்ளனர் மக்கள் நீதி மய்ய மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் மூலமாக செய்து தந்தும் அங்கு பயிலும் சுமார் 800 மாணவ மாணவியர்கள் போதிய ஆசிரியர்கள் இல்லதாதால் அவர்களின் கல்வி தடைபடுகிறது, இந்த இடர்பாடுகள் சுமார் 1 வருடகாலமாகவே தொடர்ந்து வருவதால் தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி இந்த தர்ணா போராட்டாம் செய்யப்பட்டது.



