தமிழகம் மார்ச், 21, 2022
வழி காட்டும் அரசியல் இதுவல்லவோ !
தமிழகம் முழுக்க மாவட்ட செயலாளர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களிடம் 21.03.2022 இன்று சேவை பெறும் உரிமைச் சட்டம் அமல்படுத்த வேண்டி மனுக்களை அளித்த மக்கள் நீதி மய்யம்.
சேவை பெறும் உரிமைச் சட்டம் மூலம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் முழுமையாக கிடைக்கப் பெறவும் அதன் ஒளிவு மறைவின்றி உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மக்களுக்கு கிடைக்க அவசியம்.
லஞ்சமும் ஊழலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று உணர்த்திக் கொண்டே இருக்கும் மக்கள் நீதி மய்யம்.
பயண நேரம், சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், எல்லாவற்றுக்கும் ஓர் கால நேரம் நிர்ணயிக்கப்படுகிறது. அரசின் பல துறைகளில் பெறப்படும் சேவைகள் எத்தனை நாட்களுக்குள் கிடைக்கப் பெறும் எனும் விபரங்கள் எதுவும் தெரிவதில்லை பணம் கொடுத்தால் அடுத்த நிமிடங்களில் கைகளில் கிடைக்கச் செய்கிறார்கள். நேரிடையாக அல்லது மறைமுகமாக இடைத்தரகர் மூலமாகவே கையூட்டு பெறுவதை இச்சட்டம் தடுக்கும் ஒவ்வொரு சேவையை பொதுமக்கள் விண்ணப்பித்து அது கிடைக்க நிர்ணயிக்கப்பட்ட காலம் தெளிவாக குறிப்பிடப்பட்டு இலக்கு நாளில் அச்சேவையை பெறும் பட்சத்தில் அவ்வப்போது குறிப்பிட்ட துறை அலுவலகத்தில் கால் தேய நடந்து களைப்படைய அவசியம் இல்லாமல் போகும். ஆகவே இந்தச் சட்டம் அனைத்து துறைகளிலும் அமல்படுத்துதல் மிகச்சிறந்த ஆக்கப்பூர்வமான நிர்வாகம் எனலாம்.
புரையோடிப்போன இலஞ்சம் புற்றுநோயை போன்றது. உடலில் ஓடிடும் குருதியும் ஓர் அன்னை தன் பிள்ளைகளுக்கு தரும் முலைப்பாலும் தூய்மையாக தான் இருக்கும் அது போல் தான் அரசின் ஒவ்வொரு துறையும் இருக்க வேண்டும் என நினைக்கும் ஓர் கட்சி.
இதை மக்கள் நீதி மய்யம் தனக்காக மட்டும் கேட்கவில்லை ; நமக்காக கேட்கிறது, இன்று நமக்காக மட்டும் கேட்கவில்லை, நாளை நம் சந்ததிகளுக்காக கேட்கிறது. கூடினால் கோடி நன்மை. சேவை பெறும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்திட வேண்டும். சீரமைப்போம் தமிழகத்தை !














சேவை பெறும் உரிமைச்சட்டத்தை அமல்படுத்தக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.
(21.03.2022)









