சென்னை மார்ச் 17, 2022
நடந்து முடிந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாநாடு – 2022 இல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையில் “நல்ல திட்டங்களையும், வளர்ச்சிப் பணிகளையும் நீங்கள் மேற்கொள்ளும் அதே சமயத்தில், மக்களை உடனடியாக பாதிக்கக்கூடிய சில குறிப்பிட்ட அடிப்படை அரசுப் பணிகளிலும் உதாரணமாக பட்டா மாறுதல், சான்றிதழ்கள் வழங்குதல் போன்றவற்றிலும் நீங்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்” என்றும் குறிப்பிட்டுப் பேசினார்.
கொடுக்கப்படும் மனுக்களுக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்பதை மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியரால் கூட நிர்ணயிக்க முடியாத நிலை தான் இப்போது உள்ளது. ஓரிரு வாரத்தில் முடிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள், ஓரிரு ஆண்டுகள் வரை கூட இழுத்தடிக்கப்படுகிறது. இவற்றிற்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நிரந்தரத்தீர்வு காணும்பொருட்டு முன்வைக்கப்பட்ட சட்டம் தான் சேவை பெரும் உரிமைச் சட்டம்.
ஆகவே சேவை பெரும் உரிமைச் சட்டத்தை உடனே அமல்படுத்த வலியுறுத்தி வரும் (21.03.2022) திங்கட்கிழமை அன்று தமிழகமெங்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட உள்ளது என்பதையும், இச்சட்டம் செயல்பாட்டுக்கு வரும்வரை மய்யத்தின் தொடர் வலியுறுத்தல்கள் தொடரும் என்றும் மாநில செயலாளர் திரு செந்தில் ஆறுமுகம் அவர்கள் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.



சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்றவேண்டும்
இதன் தொடர்பாக தலைவர் அவர்களின் ஜனவரி 07, 2022 தேதியிட்ட அறிக்கை மற்றும் நாளிதழ்களின் இணையதளங்களில் வெளியான தகவல்கள் இங்கே உங்களின் பார்வைக்கு







சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்தியுள்ள மாநிலங்கள் (மாதம் & வருடம்)
- மத்தியப் பிரதேசம் – 2010
- உத்தரப் பிரதேசம் – ஜனவரி,2011
- பீகார் – மே, 2011
- பஞ்சாப் – ஜூலை,2011
- ஜம்மு காஷ்மீர் – ஜூலை,2011
- இமாச்சலப் பிரதேசம் – ஆகஸ்ட்,2011
- ராஜஸ்தான் – ஆகஸ்ட்,2011
- சத்தீஸ்கர் – செப்டம்பர்,2011
- தில்லி – செப்டம்பர்,2011
- உத்தரகண்ட் – அக்டோபர்,2011
- ஜார்க்கண்ட் – நவம்பர்,2011
- கர்நாடகம் – நவம்பர்,2011
- கேரளம் – ஜூலை,2012