கோவிலம்பாக்கம் மே 23, 2022
செய்யும் நற்பணிகள் என்றும் நிறுத்தி விடுவதில்லை. அதற்கு சாட்சியாக தமிழகம் முழுக்க நடந்து கொண்டிருக்கும் மக்களுக்கான சேவைகள் நற்பணிகள்.
கொளுத்தும் வெயில் வீசும் அனல்காற்றில் ஆஜானுபாகுவாக இருப்பவர்களே ஆடிப்போய் நிற்கிறார்கள். இதில் பெண்மணிகளும் வயது முதிர்ந்தவர்களும் சாலைகளில் தெருக்களில் நடந்து செல்கையில் தாகமெடுக்க சற்றே இளைப்பாற அங்கே ஓர் பந்தலில் தண்ணீரும் மோரும் கூடவே பழங்கள் ஏதேனும் கொடுக்கப்பட்டால் வெயில் தாக்கம் குறைந்து அதனால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாமல் சற்று ஆசுவாசம் கொள்ளலாம்.
அதனால் தான் தமிழகம் முழுக்க மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தண்ணீர் பந்தல் அமைந்து அதை முறையாக பராமரித்து வருகின்றனர்.
மக்கள் நீதி மய்யம் நிர்வாகி திரு ஷங்கர் ரவி அவர்களின் ஏற்பாட்டில் மற்றும் அமைப்பில் கோவிலம்பாக்கம் மற்றும் மேடவாக்கம் பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டு முறையே சுத்தமான குடிநீர், சுவையான நீர் மோர் மற்றும் பல இடங்களில் தாவரங்களின் விதைகளும் வழங்கப்பட்டன.
இத்தகைய நற்பணிகளை தொடர்ந்து செய்துவரும் மய்யத் தமிழர் திரு ஷங்கர் ரவி அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது மய்யத்தமிழர்கள் குழு.



