சென்னை : மார்ச் 18, 2025

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையின் கீழ் அவரது ஆலோசனையின்படி வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்தான கலந்தாலோசனை கூட்டம் சென்னை திரு.வி.க நகர் தொகுதியில் ஞாயிற்றுகிழமை அன்று நடைபெற்றது. சென்னை மண்டல செயலாளர் திரு.மயில்வாகனன் அவர்களின் ஆலோசனையின்படி பெரம்பூர் & திரு.வி.க நகர் மாவட்டச் செயலாளர் திரு.உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக சமூக ஊடக அணியின் மாநில செயலாளர் திரு.லக்ஷ்மன் அவர்களும் திரு.வி.க. நகரின் மாவட்டத் துணைச்செயலாளர் திரு.சின்னதுரை மற்றும் மாவட்ட அமைப்பாளர் திருமதி.பிரிசில்டா நான்சி அவர்கள் மற்றும் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஆற்ற வேண்டிய தேர்தல் பணிகள், பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது மேலும் நிர்வாகிகளின் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

https://twitter.com/maiamofficial/status/1901873020010123728

https://twitter.com/Maiatamizhargal/status/1902047062449070246

நன்றி : மக்கள் நீதி மய்யம்