திருப்பூர் 03-டிசம்பர், 2022
தமிழகத்தின் பின்னலாடை உற்பத்தி செய்யும் மிக முக்கிய நகரமான திருப்பூரில் 02.01.2022 அன்று மக்கள் நீதி மய்யம் நடத்திய இரு நிகழ்வுகள் பின்வருவன.
முதலாவதாக விழியில் அதன் பார்வையில் குறைபாடுகள் கொண்ட பலரின் இன்னல்களை தீர்க்கும் பொருட்டு இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் ஒன்றை மய்யத்தின் கொள்கை பரப்பு செயலாளர் மருத்துவர் அனுஷா ரவி அவர்களின் முன்னெடுப்பில் திறன் கொண்ட கண் மருத்துவர்கள் குழுவினரை அமைத்து இந்த சேவை தேவைப்படும் பொதுமக்களை அவர்கள் பயனுறும் வகையில் இலவசமாக சிறப்பு கண் மருத்துவ சிறப்பு சிகிச்சை முகாமை நடத்தி வைத்தனர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள்.
மேலும் அடுத்ததாக கட்சியின் பெயர் இலச்சினை பதிக்கப்பட்ட வருடத்திய நாட்காட்டியை பொதுமக்களுக்கு வழங்கும்பொருட்டு நிர்வாகிகள் கொண்ட குழுவினர் வெளியிட்டனர்.
