சான் பிரான்சிஸ்கோ, ஆகஸ்ட் 20, 2022
மக்கள் நீதி மய்யத்தின் தகவல் தொழில் நுட்ப பின்புலத்தை (IT Infra) வலுப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் நடத்தப்பட்ட மய்ய நிர்வாகிகள் கூட்டத்தில் தலைவர் அவர்கள் கலந்துகொண்டார். கூட்டத்தில் கட்சி வளர்ச்சிக்கு தகவல் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த தலைவர் அவர்கள், கட்சியின் அடுத்த கட்ட பயணம் பற்றியும் நிர்வாகிகளுக்கு விளக்கினார். தலைமையகம் மற்றும் மாவட்ட செயல்பாடுகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்கு இதுவரை எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் தலைவருக்குத் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டன.
கூட்டத்தில், அமெரிக்காவிலிருந்து மய்யத்தின் தொழில்நுட்ப முயற்சிகளை சாத்தியமாக்குவதற்கு உழைத்துவரும் மய்ய நிர்வாகிகளுக்கு தலைவர் பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தை திரு மதுசூதனன் அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார், இந்நிகழ்வில் கடல் கடந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




