டிசம்பர் : 06, 2024
இந்திய சட்ட மாமேதை பாபசாஹேப் அண்ணல் டாக்டர் திரு.B.R. அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளான இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் அண்ணலின் நினைவை போற்றும் வகையில் புகழாரம் சூட்டியுள்ளார்.

“சட்டம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் தனக்கிருந்த பேரறிவை, சமூகச் சீர்திருத்தத்துக்கும் அனைத்து மக்களின் நலனுக்குமாகப் பயன்படுத்திய மாமனிதர் அண்ணல் பாபா சாகேப் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று. ஆதிக்க சக்திகளிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்வதற்காக அவர் வழங்கிய அரசியல் சாசனத்தை உயர்த்திப் பிடிப்போம். அண்ணலின் நினைவை நெஞ்சில் சுமப்போம்.” – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்
அண்ணல் அம்பேத்கரின் நினைவுகளை நெஞ்சில் நிறுத்துவோம் – தலைவரின் சாதி மறுப்பு பற்றிய பார்வைகள்
#AmbedkarJayanthi #KamalHaasan #MakkalNeedhiMaiam
நன்றி : மக்கள் நீதி மய்யம்