தமிழ்நாடு : பிப்ரவரி 11, 2௦23
ஏன் மக்கள் நீதி மய்யம் ? – ஒரு தொண்டனின் பார்வை
#1: #KamalHaasan நம்மவரின் நேர்மை. அரசியலின் அவல நிலைக்கு நேர்மையின்மை தான் தலையாய காரணம் என்று நம்புகிறேன். நேர்மையாக வாழ்வதே கடினமாகிவிட்ட சமுதாயத்தில் நேர்மையையே தன் அடையாளமும் கட்சியின் அடையாளமுமாக வைப்பதற்கு துணிவும் நேர்மையும் வேண்டும்.

Honesty is a luxury most can’t afford. நேர்மை என்பது ஒரு ஆடம்பரம். அது பெரும்பாலானவர்களுக்கு சாத்தியமில்லை.
கருப்பு பணம் அதிகம் புழங்கும் சினிமாத் துறையில் நேர்மைக்கு உதாரணமாய் இருப்பதே ஒரு சாதனை தான். வருமான வரி துறையே உதாரணமாய் சொல்லும் ஒருவர் #KamalHaasan. இதில் எனக்கு மிகவும் பிடித்தது,

1) கமல் சார் இதை இப்பொழுது செய்யவில்லை. எல்லோரும் கருப்பு பணம் வாங்கும் போது, தானும் வாங்கினால் யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள் என்று தெரிந்தும் நேர்மையாய் இருந்தது .
2) தன்னை விட இளைய நடிகர்களும் அதிக கோடிகளை சேர்த்து வைத்தாலும் அந்த peer pressure, ego இல்லாமல் நேர்மையை தேர்ந்தெடுத்தது தான். இப்படிப்பட்ட ஒருவர் மக்கள் பணத்தை ஒரு நாளும் கொள்ளையடிக்க மாட்டார் என மனப்பூர்வமாக நம்புகிறேன். #MNM
சரி இவர் நேர்மையானவருன்னு எப்படி நம்புறது? அரசியலில் IT ரெய்டுக்கு பயப்படாத அரசியல்வாதி பார்ப்பது அரிது. நம்மவரும் ரெய்டு பாத்து பயந்துவிடுவார் என்று பலர் கூறினார். அதற்கு நம்மவர் கூறிய பதில் பொது வெளியில்: ரெய்டு விட்டுப்பார்
தன் சொத்து விவரத்தை நேர்மையாக உண்மையாக வெளியிட்டார். மற்றவர் சொத்து விவரங்களை பாருங்கள். இதில் கூட உண்மை கூறாதவர்கள் மக்களுக்கு நேர்மையான அரசியல் தருவார்கள் என்று நான் நம்ப மாட்டேன்.

ராஜ் கமல் பிலிம்ஸ் திரைத் துறையிலும் நேர்மையாய் வர்த்தகம் செய்ய முடியும் என்று நிரூபித்திருக்கிறது. விக்ரம் படம் வெளிவந்த பின் திரையரங்க உரிமையாளர்கள் வருமானத்தை வெளிப்படையாக பொது வெளியில் வெளியிட்டார்கள். ரெட் giant நிறுவனத்தையே நேர்மையாக நடக்க வைத்தார் நம்மவர்.
நம்மவரின் #KamalHaasan நேர்மையை பற்றி அவர் துறை சார்ந்த பலர் கூறியுள்ளனர். அவர் கருப்பு பணம் வாங்க மாட்டார் என்றும். அனைத்தும் check வழி தான் என்றும். இது சார்ந்த காணொளி இருந்தால் பகிரவும்.
எழுத்து & கட்டுரையாக்கம் : திரு தினேஷ்