தமிழ்நாடு : பிப்ரவரி ௦4, 2௦23
சாலைகள் போடப்படுவதில் தலைவிரித்தாடும் முறைகேடுகள் பற்றி நாம் முன்பே எழுதி இருந்தோம். அதன் தொடர்ச்சியாக கூட இந்த செய்திகளை நாம் உணரலாம்.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும் மாநகராட்சி, ஊராட்சி நிர்வாகங்களில் சாலைகள் மற்றும் தெருக்கள் போடப்படும் டெண்டர்கள் விடப்படும், அதில் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தாரர்கள் பங்கு பெற்று முறையாக ??!! பெறப்பட்ட டெண்டர்களை செயல்படுத்தும் முறைகள் அனைவரும் அறிந்ததே.
அதில் பல திட்டங்கள் உண்டு, பிரதான சாலைகள், கிளைச்சாலைகள், தெருக்கள் என பலவகையான தார்ச்சாலைகள் போடப்படும். அப்போது அதன் பயன்பாடு பொறுத்து சாலைகளின் நீள அகலங்கள் மற்றும் தடிமன் போன்ற அளவுகளில் சாலைகள் போடப்படும் முன்னர் அதற்கு முன்பு போடப்பட்டிருக்கும் தார்ச்சாலையை சுரண்டி (ஆங்கிலத்தில் இதை மில்லிங் என்று அழைப்பார்கள்) எடுத்துவிட்டு புதிய தார்ச்சாலையை போடும்போது தான் உயரம் அதிகரிக்காமல் இருக்கும் அதனால் வீடுகள் தாழ்வாக நிலைக்கு மாறிடாமல் இருக்கும்.
போடப்படும் தார்ச்சாலை தரமானதாக இருக்க வேண்டும் ஏன் என்றால் அதற்கான தொகையை தான் அரசு நிர்வாகம் ஒப்பந்தாரர்களுக்கு பட்டுவாடா செய்யும்.
இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு இப்போதெல்லாம் போடப்படும் (இப்போது மட்டுமல்ல என்றைக்கு லஞ்சம் கேட்கப்பட்டு கொடுக்கப்பட்டதோ அன்றிலிருந்து தரமற்ற சாலைகள் தான் போடப்படுகிறது என்பது தான் வேதனையான நிதர்சனம்) சாலைகள் தரமற்றதாக காணப்படுகிறது எப்படியெனில் கீழே உள்ள காணொளியை பாருங்கள் அதன் தரம் என்னவென்று நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள், நாம் அனைவரும் அரசுக்கு செலுத்தும் நேர்முக மற்றும் மறைமுக வரிகள் மூலம் செலவழிக்கப்படும் பணம் இப்படி தரமற்ற வழிகளில் செலவழிக்கப்படும் அவலம் நடந்து கொண்டிருக்கிறது.
தரமற்ற முறையில் தார்ச்சாலை அமைப்பு: பொதுமக்கள் முற்றுகையால் பணிகள் நிறுத்தம்- Dinamani
இதற்கு காரணம் என்ன என்று தெரிந்த ஒன்றே அவை கட்டுக்கடங்காமல் போகும் கேட்டுப் பெறப்படும் லஞ்சம் மற்றும் ஊழல்கள் தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
ஒவ்வொரு ஓட்டுக்கும் கொடுக்கப்படும் பணம் மீண்டும் கொடுத்தவர்கள் கஜானக்களுக்கு மட்டுமே சென்று சேரும் அரசு கஜானாக்கள் வழக்கம் போலவே காலியாகத் தொடங்கும்.



Tamil News | தரமற்ற தார்ச்சாலை அமைத்த ஒப்பந்ததாரர் அதிரடி தகுதி நீக்கம் | Dinamalar
தரமற்ற முறையில் தார்ச்சாலை அமைப்பு: பொதுமக்கள் முற்றுகையால் பணிகள் நிறுத்தம்- Dinamani
நமது தமிழ்நாட்டில் தான் இப்படி என்றால் வடநாடான உத்தரப்பிரதேசம் அதே போன்றே தரமற்ற சாலைகள் போடப்பட்டுள்ளன