எழும்பூர் பூர்வகுடிகளை மிரட்டிவிட்டு சென்றிருக்கிறார் @iparanthamen இங்கவே வீடு கொடுக்கலாம்னு பார்த்தேன். பேட்டி யார்ட்ட கொடுத்திங்க? அவனா வீடு கொடுப்பான்? பேட்டி கொடுக்குறவங்களுக்குலாம் பெரும்பாக்கத்துல தான் வீடு கொடுப்பேன். யார் உங்களை தூண்டி விடுறது?

தூண்டிவிடுறவங்களை காட்டுங்க. உங்கள தங்க வைச்சு சோறு போட்டா, சோறு நல்லாலையா? அங்க பாஸ்மதி அரிசியா தின்னுட்டிருந்திங்க நீங்க? நேற்று ரெட்பிக்ஸ்க்கு வீடியோ கொடுத்த பெண்களை கூப்பிட்டு மிரட்டியிருக்கார்

மக்கள் அனைவரும் பயத்திலும் சோகத்திலும் உள்ளனர். வீடு கொடுக்கும் அதிகாரம் MLAவிற்கு உண்டா? அடிப்படை வசதிகளை மக்கள் கேட்டால், இதற்கு முன்பு எப்படி வாழ்ந்தீர்கள் எனக் கேட்கலாமா? ரோட்டில் வாழ்தாலும் பூ கட்டியாவது பிழைத்தார்கள். இங்கேயிருந்து பூக்கட்ட போக முடியுமா?

பிள்ளைகள் பள்ளியில் இருந்து 2.5கி.மீ நடந்து வராங்க. இங்கருந்து பள்ளிக்கோ, வேலைக்கோ எக்மோர் போக நேரடியாக பஸ் கிடையாது. சுத்தணும். பஸ்ல போனா, காத்திருப்பு நேரம் உட்பட, ஒரு மணி நேரத்தை தாண்டும். நகர்ப்புற ஏழை மக்களை மிரட்டலாமா?

எல்லாத்தையும் தூக்கிட்டு ரோட்டுக்கே போங்கடி.. பேட்டி கொடுப்பியாடி.. இப்படி பேசலாமா? விளிம்புநிலை மக்களுக்கு அடிப்படை தேவைகளை செய்ய வேண்டியது உங்களின் கடமை. உங்கள் வீட்டுப் பணமல்ல. மக்களுக்காகத்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர். இதை மறவாதீர்

“அவர் திட்டிட்டு போன உடனே, இங்க நடுரோட்டில் உக்காந்து மறியல் பண்ணிருக்கணும்” – எழும்பூர் அக்கா ஒருவர். உங்க மிரட்டலுக்கு மக்கள் பயப்படவில்லை. விளிம்பு நிலை மக்கள் என்றால் அவமரியாதையாக பேசலாம் என்கிற எண்ணத்தை கைவிட்டு, மக்கள் ஊழியராக மக்களிடம் மன்னிப்பு கோருங்கள்.