கரூரில் மாணவி பாலியல் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளவில்லை. புகார் கொடுக்கச் சென்ற குடும்பத்தினரை காவல் துறை ஆய்வாளர் கண்ணதாசன் குடிபோதையில் பெண்ணின் தாயாரை எழுதக் கூசும் வார்த்தைகளால் பேசி,உறவினர்களை அடித்து சித்ரவதை செய்திருக்கிறார்.

இன்று அந்த தாய் என்னிடம் சொல்லி கதறி அழுதபோது என் நெஞ்சே உறைந்து போனது. இந்த காவல் நிலையத்தை நம்பி பெண்கள் எப்படி புகார் கொடுக்க போகமுடியும்? உடனடியாக காவல் ஆய்வாளர் பணிநீக்கம் செய்யப்படவேண்டும். ஆய்வாளர் மீது முறையாக வழக்கு பதிவுசெய்யபட்டு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்

Jothimani – Member of Parliament-Karur

பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை குறித்து புகார் கொடுக்க சென்ற அவரின் உறவினர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்து சித்ரவதை செய்த காவல் ஆய்வாளரை கைது செய்ய வேண்டி தமிழக முதல்வர் திரு. @mkstalin அவர்களுக்கு நான் எழுதிய கடிதம்