ஈரோடு ஜூலை 11, 2022

ஈரோடு மாவட்டம் மக்கள் நீதி மய்யம் (மேற்கு) சார்பில் வெண்டிப்பாளையம் பால விநாயகர் கோயிலில் பொதுமக்களுக்கு இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ம.நீ.ம மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு எஸ் பரணி அவர்கள் தலைமை தாங்கினார் இந்நிகழ்ச்சியில் மாநில ஊடகப்பிரிவு இணைச் செயலாளர் திரு சூர்யா வரவேற்றார்.

நற்பணி இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் திரு எஸ் வி மகாதேவன் சிறப்பு அழைப்பாளராக பங்கு கொண்டு சிறப்பித்து மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். உடன் நகர செயலாளர்கள் திரு குணா திரு விமல் டேவிட்ராஜ் மற்றும் மகளிர் அணி திருமதி விஜி மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இச்சிறப்பு கண் மருத்துவ சிகிச்சை முகாம் நிறைவின் போது பொருளாளர் திரு கார்த்திக் நன்றி கூறினார்.