சென்னை : மார்ச் ௦5, 2௦23

நிர்வாக வழிமுறைகளின்படி தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் பேருந்துகள் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்கிக் கொள்ள அனுமதி அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்தான முழுமையான மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

எதனால் அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் இயக்கிவரும் பேருந்துகள் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்கிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது நிர்வாக ஒழுங்குமுறை, நிதிப்பற்றாக்குறை காரணமா என உறுதியான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலமாக நமக்கு எழுகிற சந்தேகம் என்னவெனில் கடந்த 2௦21 ஆம் ஆண்டில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக தனது தேர்தல் பரப்புரையில் மற்றும் வாக்குறுதியில் மகளிருக்கு என்று இலவச பேருந்து பயணம் செய்ய அனுமதி அளிக்கும் என்று அறிவித்தது அதனை ஆட்சியேற்ற பின்னர் நடைமுறைப்படுத்தியது. அதன்படி இரண்டு நாட்களுக்கு முன்னதாக முதல்வர் அவர்கள் இது குறித்து பெருமிதமாக பேசினார். தற்போது இந்த தனியார் மூலமாக பேருந்துகள் இயக்கப்படும் என்கிற அறிவிப்பினை தொடர்ந்து மகளிர்க்கு அளித்த இலவச பேருந்து பயணம் என்பது இனி கேள்விக்குறியாகுமோ என்று பரவலாக கருத்துகள் உருவாக வாய்ப்புள்ளது.

Private buses in Chennai soon (minnambalam.com)

இது கடந்த ஆண்டில் இதே போன்று அரசு பேருந்துகள் தனியார்வசம் இயக்கப்படும் என்ற தகவலின் அடிப்படையில் வெளியான கட்டுரை (கீழே)

சென்னையில் தனியார் பேருந்துகள்? அதுவும் இந்தாண்டே.. வெளியான பரபர தகவல்! எப்படி இயக்கப்படும் | Tamilnadu govt soon to allow Private operators to operate buses in Chennai – Tamil Oneindia Group 3Group 3Group 3Group 3