மார்ச் : 01, 2024

தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர்களில் ஒருவருமான திரு. இராசேந்திர சோழன் அவர்கள் தனது என்பதாவது வயதில் முதுமை காரணமாக இன்று இயற்கை எய்தினார். அன்னாரது மறைவிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

“எண்பதாம் அகவையைத் தொடும் எழுத்தாளர் இராசேந்திர சோழன் காலமாகிவிட்டார். அஸ்வகோஷ் என்கிற புனைபெயரிலும் அவர் எழுதினார். சிறுகதைகளைப் புதுப் பாணியில் எழுதி சாதனை படைத்த இராசேந்திர சோழன், டில்லி தேசிய நாடகப் பள்ளியின் பயிற்சியைப் பெற்றுக்கொண்டு, நாடகப் பிரதிகளை உருவாக்கியவர். பொதுவுடைமைத் தத்துவங்களை எழுதிப் பரவலாக அறியப்பெற்ற முற்போக்காளர். தீவிரமான மொழிப்பற்றாளரான இராசேந்திர சோழன், தெனாலி ராமன், மரியாதை ராமன் வரிசைக் கதைகளில் கூட, தன் பிரத்யேகப் பார்வையைப் பொருத்தி மறு உருவாக்கம் செய்தவர். அவருக்கு என் அஞ்சலி.”திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்