சென்னை : மே 20, 2025

நமது மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வழிகாட்டுதல்படி மக்களின் தாகம் தீர்க்கும்படியான நீர் மோர் பந்தல் அமைப்பதும் உறுப்பினர்கள் சேர்க்கை முகாமும் திரு.வி.க நகர் தொகுதியில் கடந்த 18ஆம் தேதியன்று நடைபெற்றது. பெரம்பூர் & திரு.வி.க நகர் மாவட்டச் செயலாளர் திரு.உதயகுமார் அவர்கள் ஒருங்கிணைப்பில் துணைச்செயலாளர் திரு.சின்னதுரை அவர்கள் ஏற்பாட்டில் சென்னை மண்டல செயலாளர் திரு.மயில்வாகனன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளரான பொறியாளர் அணி மாநில செயலாளர் டாக்டர் திரு.வைத்தீஸ்வரன் அவர்கள் கட்சிக் கொடியேற்றி வைத்தார். மேலும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் திரு.வி.க. நகர் தொகுதியில் கொடியேற்றம், உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர்மோர், பழச்சாறு, தர்பூசணி விநியோகம்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை மண்டலச் செயலாளர் திரு.மயில்வாகனன் அவர்களின் தலைமையில், மாவட்டத் துணைச் செயலாளர் M.சின்னதுரை ஏற்பாட்டில், பொது மக்களுக்கு நீர்மோர், இளநீர், வெள்ளரிக்காய், தர்பூசணி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

பொறியாளர் அணி மாநிலச் செயலாளர் டாக்டர் திரு.எஸ்.ஆர்.வைத்தீஸ்வரன் அவர்கள் கட்சி கொடி ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் 15-க்கும் மேற்பட்டோர் புதிய உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர்.

நிகழ்வில் பொறியாளர் அணி சென்னை மண்டல அமைப்பாளர் திரு. சரவணகுமார், தலைமை நிலைய பேச்சாளர் திரு. பாலமுருகன், மாவட்ட பொருளாளர் V.ஆனந்த், நற்பணி அணி மாவட்டத் துணை அமைப்பாளர் திரு.மாறன், நகர செயலாளர் திரு. M.A.வேலா, வட்டச் செயலாளர்கள் திரு.M.K.P.சக்திவேல், திரு.N.பிரபா, திரு.K.N.பிரசாந்த், திரு.A.மஜித், திரு.V.P.K.கார்த்திக், திரு.N.V.சீனிவாசன், திரு.M.சண்முகம், திரு.J.பிரேம், நற்பணி அணி திரு.ஜீவா, சமூக ஊடக அணி நகர அமைப்பாளர் திரு.ஜோசி, கிளை செயலாளர்கள் திரு.K.துரைராஜ், திரு.M.பாலா, திரு.செல்வபதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். – மக்கள் நீதி மய்யம்