கோயம்புத்தூர் : மார்ச் 25, 2025

மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஏதோவொரு பகுதிகளில் மக்களுக்கான பணிகளில் ஈடுபட்டு கொண்டே இருப்பார்கள் என்பது சிறப்பு. அந்த வகையில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகள் 24 – 26 உட்பட்ட பகுதிகளில் கடந்த ஞாயிறன்று மார்ச் 23 அன்று மக்கள் நீதி மய்யம் கட்சி கோவை மாவட்ட நிர்வாகிகள் சார்பாக ஆய்வுகள் மற்றும் களப்பணிகள் நடைபெற்றது. மாவட்டத் துணைச்செயலாளர் ஏற்பாட்டில் மாவட்டச் செயலாளர் தலைமையில் நிர்வாகிகள் பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்.

களப்பணி மேற்கொண்ட நிர்வாகிகள், அப்பகுதியில் நமது கட்சியின் புதிய கொடிகளை ஏற்றுதல், தொழில்முனைவோர் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நீண்ட நாட்களாக கட்டி முடிக்கப்படாமல் நிலுவையில் இருக்கும் ரயில்வே மேம்பாலம் குறித்தும், அந்த வார்டுகளில் ஒவ்வொரு தெருவிலும் வசிக்கும் பொதுமக்களைச் சந்தித்து நீண்டகால கோரிக்கைகள் என்ன என்பதை ஆய்வு செய்தனர். மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து மனுக்களை அளித்து கோரிக்கைகளை ஆய்வு செய்து நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டிய செயற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் பேசும்போது “நீங்கள் பொதுமக்களுடன் இயைந்து அவர்களுக்கு தேவையான அனைத்து பணிகளையும் கண்டு கேட்டுணர்ந்து அதற்கான தீர்வுகளை காணுங்கள் அதுவே மிகச்சிறந்த வழி” என்று தெளிவுபட கூறுவார். அப்படி சொன்ன தலைவரின் கருத்துக்களை செயலாக்க ஒவ்வொரு நிர்வாகிகளும் தொடர்ச்சியாக களப்பணிகளை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/maiamofficial/status/1904477606583705925

கோயம்புத்தூர் மாநகராட்சி 24, 26-து வார்டுகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் களப் பணி.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதல்படி, கோயம்புத்தூர் மாநகராட்சி 24, 26-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மார்ச் 23-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) களப் பணி நடைபெற்றது. கட்சியின் சிங்காநல்லூர் மாவட்டச் செயலாளர் திரு. மயில் K.கணேஷ் தலைமையில் நடைபெற்ற களப் பணிக்கான ஏற்பாடுகளை மாவட்ட துணைச் செயலாளர் டாக்டர் சௌந்தரராஜன் செய்திருந்தார்.

கோவை தண்ணீர் பந்தல் ரவுண்டானா பகுதியில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த தொழில்முனைவோர் மற்றும் டைடல் பார்க் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள மேம்பாலப் பணிகளை கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். அதேபோல, அப்பகுதியில் தெரு வாரியாக ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி, அவற்றுக்குத் தீர்வுகாண்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், மக்கள் நீதி மய்யம் மாநகரச் செயலாளர் திரு. ரவீந்திரன், மாவட்ட அமைப்பாளர்கள் திரு. சிவக்குமார், திருமதி தனலட்சுமி, திரு. கமல், மாவட்ட துணை அமைப்பாளர் திருமதி. மணிமொழி, மாநகரப் பொருளாளர் திரு. சிவசண்முகம் மாநகர அமைப்பாளர் திரு. ராதாகிருஷ்ணன், வட்டச் செயலாளர்கள் திரு. கமல் தேவராஜ், திரு. மோகன், இளைஞரணி அமைப்பாளர்கள் திரு. பிரபாகரன், திரு. தாமோதரன் மற்றும் திரு. லோகநாதன், திரு. கமல் உதயன், திரு. விக்னேஷ் உள்ளிட்டோர் பங்கேற்று களப் பணியாற்றினர்.

  • மக்கள் நீதி மய்யம்

நன்றி : மக்கள் நீதி மய்யம்