சென்னை : மார்ச் 1௦, 2௦23
இதென்ன கட்சி மக்கள் நீதி மய்யம் அப்படி என்றால் என்ன நடுவில் நிற்பார்களா ? வலதும் இல்லை இடதும் இல்லை எப்படி இவர்கள் கட்சியை தொடர்ந்து நடத்துவார்கள் என்றார்கள் மேலும் முக்கிய கட்சிகள் பலவும் விரைவில் காணாமல் போய் விடும் என்றார்கள் ஆனால் அவர்களின் ஆருடத்தை எல்லாம் தகர்த்துவிட்டு 6 ஆம் ஆண்டில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
மக்கள் நீதி மய்யம் வளர்பிறையோ அல்லது தேய்பிறையோ அல்ல இது சுவாசம் போன்றது என்றும் இருந்து கொண்டே இருக்கும் என்பதாய் ஒவ்வொரு நாளும் மக்களின் நலனுக்காக சிந்திக்கும் தலைமையும் சொல்வதை செய்து முடிக்கும் நிர்வாகிகளும் தொண்டர்களும் களமாடிக் கொண்டிருக்கிறார்கள்.
தலைவர் தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் 21௦ மீனவ உறவுகள் தங்களை மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைத்துக் கொண்டனர். அவர்களை வரவேற்று பேசிய தலைவர் தமது கருத்துக்களை தெரிவித்து கொண்டார்.
மக்கள் நீதி மய்யம் உறுப்பினர் பிரதீப்குமார் ஒருங்கிணைப்பில் 210 மீனவர்கள் இன்று மய்யத்தில் இணைந்தனர். தமிழ்நாட்டு மீனவர்களின் நலன்களுக்காக எங்கள் குரல் இன்றுபோல் என்றும் ஒலிக்கும் என அவர்களை வாழ்த்தி வரவேற்றேன். – திரு கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்



https://tamil.getlokalapp.com/tamilnadu-news/200-fishermen-joined-mnm-party-9492415
மநீம கட்சியில் இணைந்த 200 மீனவர்கள்… வெளியான தகவல்…!!!!! – Seithi Solai