கோவை – செப்டம்பர் 16, 2022
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி உலகமெங்கும் வெளியான விக்ரம் திரைப்படம் 100 ஆவது நாளை கடந்து திரையிட்ட அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
வெகு காலம் கழித்து ஓர் தமிழ்த் திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதை முன்னிட்டு கோவை K G CINEMAS (KG திரையரங்கம்) நிறுவனம் வெற்றி விழாவினை பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டு நம்மவர் திரு கமல் ஹாஸன் அவர்களை கலந்து கொள்ள வேண்டுகோள் விடுக்க, அழைப்பினை முழு மனதோடு ஏற்றுக் கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை கோவை வந்தடைந்த நம்மவர் அவர்களை மக்கள் நீதி மய்யம் கோவை மாவட்ட நிர்வாகிகள் (கட்டமைப்பு & நற்பணி இயக்கம் மற்றைய அணிகள்) இணைந்து மிகப் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து இன்று KG திரையரங்கம் வளாகத்திற்கு சென்ற நம்மவர் தலைவர் அவர்கள் அங்கு அவருக்கு அளித்த வரவேற்பினை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ள விழா இனிதே நடைபெற்றது. வெற்றி விழாவில் நம்மவர் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் மிகச் சிறப்பான பேருரை ஆற்றினார்.
விழாவின் புகைப்படத் தொகுப்புகள் மற்றும் காணொளி வாசகர்களாகிய உங்கள் பார்வைக்கு இதோ.




