கோவை, ஜூலை 11 2022
2021 இல் நடந்து முடிந்த தேர்தலில் தேர்தலில் வெற்றியை விலை கொடுத்து வாங்கிய கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதே கோவை மாவட்டத்தில் பல வார்டுகளை உள்ளாட்சி தேர்தல் வாயிலாக கைப்பற்றிய ஆளும் கட்சியான திமுக கவுன்சிலர்கள் என ஒருவரும் கண்டுகொள்ளாத மாவட்டமாக மாறி நிற்கிறது கோவை.
அதைச் செய்கிறோம் இதைச் செய்கிறோம் என்று வானளாவ வாக்குறுதிகளை அள்ளித் தெளித்த சட்டமன்ற உறுப்பினர்கள் கவுன்சிலர்கள் மேயர் என தமக்கிருக்கும் அதிகாரத்தை துஷ்ப்ரையோகம் செய்வதில் மட்டும் ஆர்வம் காட்டுபவர்கள் மக்களின் நலனுக்காக சிறு துணுக்கையும் கிள்ளிப் போடாமல் வளம் வந்து கொண்டிருகின்றனர்.
கண்டுகொள்ளப்படவேண்டிய உள்ளாட்சி நிர்வாகம் கேட்பாரற்ற பிள்ளை போன்று தவித்து நிற்கின்றது. அதன் பலன் ஒவ்வொரு வார்டுகளிலும் தெருவெங்கும் சரிவர அகற்றப்படாத குப்பைக் கூளங்கள் ஆங்காங்கே வழிந்து ஓடும் கழிவு நீர் கால்வாய்கள் என கோவை நகரமே நாற்றமெடுக்கும் நகரமாக அதன் பலனாக துர்நாற்றமும் அதனால் உண்டாகும் சுகாதாரக் கேடுகளும் எங்கும் நிறைந்துள்ளன.
இவற்றை கண்டு அச்சமும் வேதனயும் கண்ட மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் தம்மால் இயன்றவரை அவைகளை சுத்தம் செய்திட விழைந்து களத்தில் இறங்கி பணிகளையும் செய்து முடித்தனர் எனினும் எந்த பதவியும் இல்லாமல் இருப்பினும் மக்களின் நலனே முக்கியம் எனக் கொள்கையை கொண்ட கட்சியாக விளங்கும் மக்கள் நீதி மய்யம் தனது அறவழி செயல்களை முடுக்கி விட்டது. இவ்வளவு சுத்தமற்ற சுகாதாரமற்ற நிலையை விளக்கமாக ஓர் மனுவாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர் நம் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்.
