கோவை : மார்ச் 13, 2025

தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனையின்படி கோவை மாவட்டம் மக்கள் நீதி மய்யம் பயிற்சி பட்டறை அணியின் சார்பில் சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அணியின் நிர்வாகிகளுக்கு சமூக ஊடகம் சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டது. கட்சியின் துணைத்தலைவர் தலைமை வகிக்க, மகளிரணி மாநில செயலாளர், கோவை மண்டல செயலாளர் முன்னிலையில், கோவை மாவட்ட மண்டல அமைப்பாளர் ஏற்பாட்டில், சமூக ஊடக அணி மாநில செயலாளர் அரசியல் களத்தில் சமூக ஊடகங்கள் எவ்வாறு பங்கு வகிக்கின்றன என்றும் அதன் தாக்கம் குறித்தும் மற்றும் அதனை பயனுள்ள முறையில் உபயோகிப்பது குறித்தும், அதனால் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பயன்கள் குறித்தும் விளக்கமளித்து நிர்வாகிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

கோவையில் மக்கள் நீதி மய்யம் பயிற்சி பட்டறை அணியின் சார்பில், கட்சியின் நிர்வாகிகளுக்கு சமூக ஊடகம் சார்ந்த பயிற்சி !

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதல்படி, கட்சி நிர்வாகிகளுக்கான சமூக ஊடகம் சார்ந்த பயிற்சிப் பட்டறை கோயம்புத்தூர் ஆராதனா அரங்கில் நேற்று நடைபெற்றது. துணைத் தலைவர் திரு.தங்கவேலு அவர்கள் தலைமை வகித்தார். மகளிர் அணி மாநிலச் செயலாளர் திருமதி.மூகாம்பிகா ரத்னம், மண்டலச் செயலாளர் திரு.ரங்கநாதன் ஆகியோரின் முன்னிலையில், பயிற்சி பட்டறை அணியின் கோவை மண்டல அமைப்பாளர் திரு. C.ஸ்ரீதர் அவர்கள் ஏற்பாட்டில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இதில் கட்சியின் சமூக ஊடக அணி மாநிலச் செயலாளர் திரு.லக்ஷ்மன் அவர்கள் பங்கேற்று, அரசியலில் சமூக ஊடகத்தின் தாக்கம், சமூக வலைதளங்களைக் பயனுள்ள முறையில் உபயோகிப்பது மற்றும் சமூக வலைதளங்களின் பயன்கள் மற்றும் நன்மைகள் குறித்து விளக்கினார்.

மிகவும் பயனுள்ள வகையில் நடைபெற்ற இந்தப் பயிற்சிப் பட்டறையில் கட்சியின் தரவு மற்றும் ஆய்வு மாநிலத் துணைச் செயலாளர் திரு.P.S. ராஜன், சமூக ஊடக அணி மண்டல அமைப்பாளர் திரு.தாஜூதீன், நற்பணி அணி மண்டல அமைப்பாளர் திரு. சித்திக், மகளிர் அணி மண்டல அமைப்பாளர் திருமதி.அருணா, மாவட்டச் செயலாளர்கள் திரு. பிரபு, திரு. அபுபக்கர் சித்திக், திரு. மயில்கணேஷ், திரு. மகேந்திரன், திரு. வரதராஜ் மற்றும் நகர, ஒன்றிய, வார்டு நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று, பல்வேறு தொழில்நுட்பத் தகவல்களைத் தெரிந்துகொண்டுப் பயனடைந்தனர்.

மக்கள் நீதி மய்யம்

நன்றி : மக்கள் நீதி மய்யம்