எழும்பூர் : மார்ச் 25, 2025
மக்கள் நீதி மய்யம் எழும்பூர் தொகுதி நிர்வாகிகள் ஏற்பாட்டில் இ-சேவைகள் முகாம், கண் பரிசோதனை முகாம், அரசு வழங்கும் கடனுதவி ஆலோசனைகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆகியவைகள் சிறப்புற நடைபெற்றது.
மக்களிடையே கட்சியின் கொள்கைகளும் கோட்பாடுகளும் சேரும் வண்ணம் அவைகளை எடுத்துரைத்து புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதும், சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயனுறும் வகையில் இலவச கண் பரிசோதனைகள் செய்து அவர்களுக்கு அதற்குத் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் அரசு மூலமாக வழங்கப்படும் கடனுதவிகள் பற்றிய விபரங்களை தெளிவாக எடுத்துரைத்தனர் நமது மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள். இவையெல்லாம் எழும்பூர் தொகுதியை சேர்ந்த ம.நீ.ம நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கான ஆலோசனைகள் சென்னை மண்டல செயலாளர் திரு.மயில்வாகனன் அவர்களும், அதற்கான தரவுகள், ஆய்வுகள் அனைத்தும் மாநில துணைச்செயலாளர் திரு.P.S. ராஜன் அவர்கள் வழங்கினார். இந்த சிறப்பு முகாமை நகரச் செயலாளர் திரு. ராமச்சந்திரன், வட்டச் செயலாளர்கள் திரு. கருணா, திரு. சித்திக் ஆகியோர் செய்திருந்தனர்.




நன்றி : மக்கள் நீதி மய்யம் & சமூக ஊடகம்