நாகர்கோவில் : மே 05, 2025

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வழிகாட்டுதல்படி பொதுமக்களின் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் அமைத்து அனைவர்க்கும் வழங்கப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் சார்பில் நாகர்கோவிலில் பொதுமக்களுக்கு நீர் மோர், பழங்கள் விநியோகம்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதல்படி, நாகர்கோவிலில் கட்சியின் தொழிலாளர் அணி சார்பில், பொதுமக்களுக்கு நீர் மோர், பழரசம் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன.

மாவட்டச் செயலாளர் திரு. B.சசி (எ) ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார். சமூக ஊடக அணி நெல்லை மண்டல அமைப்பாளர் திரு. மூர்த்தி சிவா, மாவட்ட அமைப்பாளர் திரு. விக்ரம் குமார், துணை அமைப்பாளர்கள் திரு. கணேசன் மீனா, திரு. அமீர்பாபு மாநகர அமைப்பாளர் திரு. முருகன் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களுக்கு பழங்கள், பழரசம் மற்றும் நீர் மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இந்த விழாவில், நற்பணி அணி மாவட்ட அமைப்பாளர் திரு. சங்கர் கண்ணன், மாநகரச் செயலாளர்கள் திரு. பிரிக்ஸ்டன், திரு. மூர்த்தி, நற்பணி அணி மாநகர அமைப்பாளர் திரு. குமார், நகரச் செயலாளர் திரு. சுந்தர்ராஜ், வட்டச் செயலாளர்கள் திரு. ஜஸ்டின், திரு. அருண், திரு. சுகுமாரன் நிர்வாகிகள் திரு. ராஜ்திலக், திரு. பிரகாஷ் திரு. ஜெகதீஷ் மற்றும் நற்பணி அணி முன்னாள் அமைப்பாளர் திரு. கமல் கணேசன், நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். – மக்கள் நீதி மய்யம்

நன்றி : மக்கள் நீதி மய்யம்