பெரம்பூர் ஏப்ரல் 08, 2025

தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வண்ணம் நமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக பூத் ஏஜென்ட்கள் நியமனம் மற்றும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டங்கள் பெரம்பூர் தொகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் திரு.V.உதயகுமார் அவர்களின் முன்னெடுப்பில் மற்றும் தலைமையில் தொகுதியின் மாவட்ட, நகரம், வட்ட நிர்வாகிகள் அனைவரையும் ஒன்றிணைத்து கட்சிப் பணிகளை இடையறாது செய்து வருகிறார். வீடு தோறும் நம்மவர் என்கிற திட்டத்தையும் முன்னெடுத்துள்ளார் விரைவில் அது குறித்த அடுத்தகட்ட தகவல்கள் கிடைக்கப் பெறும். இதனிடையே தற்போது நமது தட்பவெப்ப சூழலில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரும் வெப்பத்தில் பயணித்து வருகிறார்கள். அவர்களின் தாகம் தீர்க்கும் விதத்தில் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலில் பெரம்பூர் தொகுதிகளில் ஒவ்வொரு வாரமும் நீர், மோர், பழரசங்கள் மற்றும் பழங்கள் ஆகியவைகளை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த வார்டு எண் 34 இல் துவங்கிய நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி இரண்டு நாட்களுக்கு முன்னர் வார்டு 36 இல் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் கட்சியின் பொதுசெயலாளர் திரு.அருணாச்சலம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மேலும் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நாகராஜன் அவர்கள், சென்னை மண்டல செயலாளர் திரு.மயில்வாகனன், பொறியாளர் அணியின் சென்னை மண்டல அமைப்பாளர் திரு.சரவணகுமார், ஆர்.கே நகர் மாவட்டச் செயலாளர் திரு.கோவிந்தராஜ், தலைமை நிலைய பேச்சாளர் திரு.பாலமுருகன், சென்னை மாவட்ட அமைப்பாளர் (ஐ.டி) திருமதி. நான்சி ப்ரிசில்டா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் மாவட்ட துணைச்செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், மற்றும் மாவட்ட, நகரம், வட்டம், கிளை நிர்வாகிகள், மகளிர் அணியினர் உள்ளிட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர்.

அரசின் சிறுகுறு கடனுதவி பெறவும் இ- சேவைகள் தொடர்பான பணிகளும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கையும் நடைபெற்றது. கூடுதல் தகவலாக சொல்வதென்றால் கல்லூரி பயிலும் மாணவிகளும் நம்மவர் தலைவர் அவர்களின் சீரிய நேர்மையான அரசியலால் கவரப்பட்டு தங்களை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.

இறுதியில் பொதுச்செயலாளர் அவர்கள் நிர்வாகிகளிடம் கட்சியின் அடுத்த கட்ட பணிகள், தேர்தல் பணிகள், பூத் கமிட்டி அமைப்பு போன்ற முக்கிய நிகழ்வுகளில் பணியாற்ற வேண்டிய முறைகள் குறித்து விரிவாக விளக்கமளித்து உரையாற்றி உத்வேகமளித்தார்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் பெரம்பூரில் இ-சேவைகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதல்படி, கட்சியின் பெரம்பூர் மநீம மாவட்டம் சார்பில் சென்னை மாநகராட்சி 36-வது வார்டுக்கு உட்பட்ட வாசுகி நகர் பூங்கா பகுதியில் இலவச இ-சேவை மற்றும் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. சென்னை மண்டலச் செயலாளர் திரு.மயில்வாகனன் தலைமை வகித்தார். முகாமுக்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் திரு.V. உதயகுமார் செய்திருந்தார்.

கட்சியின் பொதுச் செயலாளர் திரு.அருணாச்சலம், நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நாகராஜன் ஆகியோர் பங்கேற்று, கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

முகாமில் அரசின் சிறுதொழில் கடனுதவி குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, முதலமைச்சர் காப்பீட்டு திட்டம், வங்கிக் கடனுதவி, தொழிலாளர் நல வாரியத் திட்டம் உள்ளிட்டவை தொடர்பான இ-சேவைகள் வழங்கப்பட்டதுடன், கட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது.

மேலும், கோடை வெயிலில் தவிக்கும் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில் நீர், மோர், பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கப்பட்டது.

நிகழ்வில் கட்சியின் பொறியாளர் அணி சென்னை மண்டல அமைப்பாளர் திரு. P.சரவணகுமார், மாவட்டச் செயலாளர்கள் திரு. கோவிந்தராஜ், திரு. பாலமுருகன், மாவட்ட அமைப்பாளர்கள் திருமதி. நான்சி, திரு. ஞானம், திரு. R.T.பாலாஜி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் திரு. சின்னதுரை, திரு. கணேசன், மாவட்டத் துணை அமைப்பாளர்கள் திரு. சண்முகம், திரு. விக்னேஷ், திரு. யுவராஜ், திரு. ராஜாபுத்திரன், நகர செயலாளர்கள் திருமதி. ரேவதி, திரு. தரம் குமார், திரு. வாசன், திரு. ரமேஷ், திரு. வேலா, நகர அமைப்பாளர்கள் திருமதி. மாலா, திருமதி. காதம்பரி, வட்ட செயலாளர்கள் திரு. ஜானகிராமன், திரு. R.K.கார்த்திக், திரு. S.கார்த்திக், திரு. செந்தில் நாராயணன், திரு. மோகன கிருஷ்ணன், திரு. ரவி ராஜேஷ், திரு. சக்திவேல், கிளை செயலாளர்கள் திரு. ஆனந்த், திரு. ராஜ்கமல், திரு. ஜெயராம், திரு. கணேஷ் குமார், திரு. பத்மநாபன், திரு. தேவராஜ், திரு. நாகமணிகண்டன், திரு. ரவி, திரு. பத்மநாபன், திரு. மைதீன் ஷெரிய்ப், திரு. ஐயப்பன், திரு. கோபு, திரு. மணிகண்டன், திரு. வெற்றி செல்வா, திரு. முருகவேள், திரு. கமலக்கண்ணன், திரு. சிவா, திரு. தியாகு, திரு. பால் கிறிஸ்டின், திரு. வினோத் குமார், திரு. அபிஷித், திரு. குமரேசன், திரு. ஸ்ரீதர், திரு. ஸ்ரீபாபு, திரு. ஆலன் துரை, திரு. விநாயக மூர்த்தி, திரு. முகமத் ராசிக், திரு. விக்ரம், திருமதி. முனியம்மாள், திருமதி. அனிதா மேரி, திருமதி. பர்கத், திருமதி. ராதா, திருமதி. செல்வி, திருமதி. ஜெயஸ்ரீ, திருமதி. ஜானகி, திருமதி. ஆயிஷா கனி, திருமதி. லலிதா, திருமதி. அம்மு, திருமதி. ஷாந்தி, திருமதி. புவனேஸ்வரி, திருமதி. லட்சுமி, திருமதி. கிருஷ்ணவேணி, திருமதி. கற்பகம், திருமதி. நாகம்மா, திருமதி. ஹேமமாலினி உள்ளிட்டோர் கலந்துகொண்டு, பொது மக்களுக்கு தேவையான தகவல்களையும், உதவிகளையும் வழங்கினர். – மக்கள் நீதி மய்யம்

நன்றி : மக்கள் நீதி மய்யம்