மே 27, 2௦23
புது தில்லியில் ஒருங்கிணைக்கப்பட்ட பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நாளை (28.05.2023) சனிக்கிழமை மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடக்கவிருக்கிறது. இதனிடையில் இவ்விழாவிற்கு மாண்புமிகு இந்திய குடியரசு தலைவர் அவர்களுக்கு அழைப்பு விடுக்காதது மற்றும் மாற்றுக்கருத்து உள்ள எதிர்கட்சிகளை இணைத்துக் கொள்ளாமலும் நடைபெறப் போவதாக செய்திகள் வந்துள்ளது நமது இந்திய நாட்டின் பாரம்பரியம் மற்றும் தேசநலன் ஆகியவற்றுக்கு உகந்ததாக இல்லாமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது அதற்கான என் எதிர்ப்பினை பதிவு செய்கிறேன் மேலும் அதனை கருத்தில்கொண்டு இத்தகைய முரண்களை களைந்துவிட்டு இவ்விழா நடைபெற வேண்டும் என ஓர் பொறுப்புள்ள இந்தியக் குடிமகனாக எனது பொறுப்பினை உணர்ந்து தங்களுக்கு என் கோரிக்கையை முன்வைக்கிறேன். அதே சமயம் ஒருசேர அனைத்துத்துறைகளிலும் அரசுப்பணிகள் துரிதமாகவும் ஒருங்கிணைத்து செய்யப்படவேண்டும் என்ற நோக்கில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற திறப்பு விழா என்பது தேசிய நிகழ்வு அதற்கான என் உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் மக்கள் நீதி மய்யம் மூலம் வெளியான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



பாராளுமன்றத் திறப்புவிழாவிற்கு வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் – திரு கமல்ஹாசன்




https://twitter.com/PTTVOnlineNews/status/1662407931306950656?s=20

#KamalHaasan #MakkalNeedhiMaiam #NewParliamentBuilding