சென்னை : நவம்பர் 07, 2024
தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகி இன்றும் தவிர்க்க ஓர் ஆளுமையாக விளங்கி வருகிறார். மக்களின் மீது தீராத அக்கறையால் கடந்த 2018 ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் எனும் நடுவுநிலைமை கொண்ட கட்சியை தொடங்கி பல தேர்தல்களை சந்தித்து நடத்தி வருகிறார். நவம்பர் மாதமென்றாலே அது நம்மவர் மாதம் என்று பரவலாக பேசப்படும். ஏனெனில் மற்றவர்களைப் போல் அது அவரது ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் சாதாரண நாளாக அமைந்து விடாது. தமிழகமெங்கும் உள்ள நிர்வாகிகள், ரசிகர்கள், தொண்டர்கள் என பெருந்திரளாக அன்னதானம், இரத்ததானம், உடல்தானம், நற்பணிகள், நலத்திட்டப் பணிகள் ஆகியவற்றை செய்து என மனதுக்கு நிறைவான நாளாக மாற்றி விடுவார்கள். நம்மவரும் இதனைப் பெரிதும் வரவேற்பார். ஏனெனில் வெறும் கட்டவுட் பேனர்கள் வைத்துவிட்டு செலவிடுவதை விட நாலு பேருக்கு நன்மை பயக்கும் செயல்களை செய்து வருவதால் தான் இவற்றை ஆதரிப்பதாக உள்ளக் கிடக்கையுடன் குறிப்பிடுவார். அவ்வாறே இன்றும் மேற்சொன்னது போல பல பணிகளை நடத்தித் தந்துள்ளனர்.
தனது சொந்த அலுவலுக்காக அயல்நாட்டில் இருப்பதால் அவரால் இன்றைய பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் காணொளி காட்சி வழியாக விழாவினை கண்டதாக கேட்டறிந்தோம்.
தமக்குப் பிடித்த ஆதர்ச நடிகராக, தலைவராக, மாமனிதராக கொண்டாடும் எண்ணிலடங்கா உள்ளங்கள் பலரும் சமூக ஊடகங்கள், சுவர் சித்திரங்களாக, சுவரொட்டியில், பேனர்கள் என பல வகையிலும் தமது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். குறிப்பாக அரசியல் ஆளுமைகள், கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். நேற்றைய தினம் முழுதும் வாழ்த்து மழையில் நனைந்து இருப்பார் நம்மவர் தலைவர் அவர்கள்.
எங்களை தொடர்ந்து இயங்கச் செய்திடும் மாபெரும் தலைவராக திகழ்ந்து வரும் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு மய்யத்தமிழர்கள் உளம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
நம்மவர் தலைவர் சார்பாக குழந்தைகள் கேக் வெட்டி விழாவினை துவக்கி வைத்தார்கள். துணைத்தலைவர்கள், பொதுச் செயலாளர் வரவேற்புரை அளிக்க, மாநில செயலாளர்கள் பாராட்டுரை தெரிவித்தனர். மேலும் மாற்றுத்திரனாளிகள் உள்ளிட்ட நலிந்தோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மகளிர் அணிகளைச் சார்ந்த நிர்வாகிகள், பொறியாளர் அணி, இளைஞர்கள் அணி, மாணவர் அணி, மீனவர் அணி, வழக்கறிஞர் அணி, தொழில்முனைவோர் அணி மற்றும் நம்மவர் தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட பலரும் பங்கு கொண்டு உரையாற்றி நம்மவர் தலைவரின் அளப்பரிய செயல்கள் குறித்து விவரித்தனர். விழா நிறைவுற்ற பின்னர் வந்திருந்த அனைவருக்கும் சுவையான அசைவ மற்றும் சைவ உணவுகள் பரிமாறப்பட்டன.
தலைமை நிலையத்தில் நம்மவர் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தை போன்று தமிழகம் மற்றும் அயல்நாடுகளில் கட்சியினர் மற்றும் நற்பணி இயக்கத்தினர் வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்ததோடு நில்லாமல் நற்பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் செய்ததும் குறிப்பிடத்தக்கது. அவர்கள் அனைவருக்கும் எமது உளம்கனிந்த நன்றி மற்றும் பாராட்டுக்கள்.
மக்கள் நீதி மய்யம் வாழ்துச் செய்தி கீழே
நடுநிலைக் கோட்பாடுகளுடன் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்பவரும், மாபெரும் அரசியல் இயக்கத்தின் தன்னிகரற்ற தலைவருமான மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் திரு.கமல் ஹாசன் அவர்களுக்கு இன்று பிறந்த நாள். தமிழ்ச் சமூகத்துக்கே பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் நம்மவரால் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது. இந்த நன்னாளில், நம்மவர் பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையினர் மற்றும் அவர் மீது பேரன்பு வைத்திருக்கும் பொதுமக்கள் அனைவர் சார்பிலும் திரு.கமல் ஹாசன் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்து நலமும், வளமும் பெற்று, தமிழ்ச் சமூகத்துக்கு இன்னும் பல்லாண்டுகள் அவர் சேவையாற்றி, திரைத் துறையிலும், அரசியல் அரங்கிலும் பல சாதனைகள் புரிய வேண்டுமென மனதார வாழ்த்துகிறோம் – மக்கள் நீதி மய்யம்



