மக்கள் நீதி மய்யம் கட்சியை பாஜகவின் B-Team என்று தொடர்ச்சியாக திமுக குற்றம் சாட்டுகிறது. மக்கள் நீதி மய்யமம் தலைவர் கமல் ஹாசன் அவர்களும் பாஜக ஆட்சியின் செயல்பாடுகளையும் பாஜகவின் மற்றும் RSS சித்தாந்தத்தையும் எதிர்த்து பல முறை குரல் கொடுத்ததுண்டு. அதன் தொகுப்பு இங்கு உங்கள் பார்வைக்கு.
தமிழ்த்திரையுலகின் மிகச்சிறந்த இயக்குனரும் நடிகருமான திரு. பாரதிராஜா அவர்களின் மகன் திரு.மனோஜ்குமார் பாரதி (48) அவர்கள் இதய அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார். தமிழ்த்திரையுலகின் பிரபலமான இயக்குனராக திகழும் திரு.பாரதிராஜாவின் மகனான மனோஜ் தனது தந்தையின் இயக்கத்தில் முதன் முறையாக கதாநாயகனாக தாஜ்மகால் என்கிற படம் மூலம் அறிமுகமானார். பின்னர் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்துவந்தார். இதனிடையே இயக்குனர் மணிரத்னம் இயக்கம் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். 2023 ஆண்டில் வெளியான மார்கழித் திங்கள் எனும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இதயத்தில் அறுவைசிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் திடீரென நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு அகால மரணமடைந்தார். தனது அபிமான இயக்குனரும் உற்ற நண்பருமான இயக்குனர் திரு.பாரதிராஜா அவர்களின் மகன் மனோஜ் அவர்களின் இயற்கை எய்தியது குறித்து அறிந்த மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
"நடிகரும் எனது ஆத்ம நண்பர் இயக்குநர் பாரதிராஜாவின் புதல்வனுமான மனோஜ் பாரதிராஜா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். தனது அருமை மகனை இழந்து வாடும் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்."
"இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் மகன் மனோஜ் காலமான செய்தி கேள்விப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார்.
அவர் வெளியூரில் இருக்கும் காரணத்தால், இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி மற்றும் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் சார்பாக கட்சியின் துணைத் தலைவர் திரு.A.G.மௌரியா அவர்கள், பொதுச் செயலாளர் திரு.அருணாச்சலம் அவர்கள், மாநிலச் செயலாளர்கள் திரு.செந்தில் ஆறுமுகம், திரு.முரளி அப்பாஸ், திரு.லக்ஷ்மன், திரு.ராகேஷ் ராஜசேகரன், திருமதி.ஸ்னேஹா மோகன்தாஸ், மாநிலத் துணைச் செயலாளர் திரு.P.S.ராஜன் முதலானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்."
மக்கள் நீதி மய்யம் எழும்பூர் தொகுதி நிர்வாகிகள் ஏற்பாட்டில் இ-சேவைகள் முகாம், கண் பரிசோதனை முகாம், அரசு வழங்கும் கடனுதவி ஆலோசனைகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆகியவைகள் சிறப்புற நடைபெற்றது.
மக்களிடையே கட்சியின் கொள்கைகளும் கோட்பாடுகளும் சேரும் வண்ணம் அவைகளை எடுத்துரைத்து புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதும், சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயனுறும் வகையில் இலவச கண் பரிசோதனைகள் செய்து அவர்களுக்கு அதற்குத் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் அரசு மூலமாக வழங்கப்படும் கடனுதவிகள் பற்றிய விபரங்களை தெளிவாக எடுத்துரைத்தனர் நமது மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள். இவையெல்லாம் எழும்பூர் தொகுதியை சேர்ந்த ம.நீ.ம நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கான ஆலோசனைகள் சென்னை மண்டல செயலாளர் திரு.மயில்வாகனன் அவர்களும், அதற்கான தரவுகள், ஆய்வுகள் அனைத்தும் மாநில துணைச்செயலாளர் திரு.P.S. ராஜன் அவர்கள் வழங்கினார். இந்த சிறப்பு முகாமை நகரச் செயலாளர் திரு. ராமச்சந்திரன், வட்டச் செயலாளர்கள் திரு. கருணா, திரு. சித்திக் ஆகியோர் செய்திருந்தனர்.
சென்னை : மார்ச் 05, 2025 பதிவு புதுப்பிக்கப்பட்டது மார்ச் 07, 2025 ஆளும் ஒன்றிய அரசின் அமைச்சரவையில் வருகின்ற 2026 ஆண்டில் பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு பணிகள் இயற்ற பணிகள் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது. அவசியமற்ற மறுசீரமைப்பு தெற்கில்
டிசம்பர் 19, 2024 ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட திட்டத்திற்கான அரசியல் சாசனத்தில் 129 ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் ஒன்றிய அரசின் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று மதியத்திற்கு மேல் தாக்கல் செய்தார். அதன்
கோவை : ஏப்ரல் 16, 2024 (Updated 17.04.2024) மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு தற்போது கோவை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார். அதன் நேரலை ஒளிபரப்பின் லிங்க் வெளியிட்டுள்ளது மக்கள் நீதி மய்யம்
கோவை : ஏப்ரல் 14, 2024 (Updated Arpil 15, 2024) இன்னும் சில நாட்களில் நடக்கவிருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்
சென்னை – மார்ச் 24, 2024 வருகின்ற ஏப்ரல் மாதம் தேதியன்று நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் இன்று (24.03.2024) சென்னை தி.நகரில் உள்ள தனியார் அரங்கில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் துணைத்தலைவர்கள்,
சென்னை : மார்ச் 22, 2024 நேர்மை ஒன்றையே முக்கிய குறிக்கோளாக தனித்தன்மையுடன் துவங்கிய கட்சி மக்கள் நீதி மய்யம், இதற்கு முன்னர் நீங்கள் குறைகூறிய கட்சியுடனே கூட்டணி அமைத்து விட்டீர்களே என குற்றம் சுமத்தும் அந்த நபர்களுக்கு நான் சொல்லிக்
சென்னை : மார்ச் 20, 2024 ஆளும் ஒன்றிய அரசைச் சேர்ந்த பெண் அமைச்சர்கள் இருவர் நிர்மலா சீதாராமன் மற்றும் திரைப்பட நடிகை குஷ்பு ஆகிய இருவரும், நமது தமிழக பெண்களை கேவலமான தொனியில் அதாவது கடந்த ஆண்டில் தாக்கிய மிக்ஜாம்
சென்னை : மார்ச் : 15, 2024 தூத்துக்குடி செம்பு உருக்காலையான ஸ்டெர்லைட் மூடப்பட்டதை மீண்டும் திறக்க வேதாந்த நிறுவனம் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்றதையடுத்து அப்பகுதி மக்கள் அனைவரும் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு மீண்டும் திறக்கக்கூடாது என போராட்டம் செய்தனர்
சென்னை : மார்ச் – 12, 2024 குடியுரிமைச் சட்டம் திருத்தும் செய்த மசோதாவை இன்று அமல்படுத்தியுள்ளது குறித்து தனது கடும் கண்டனத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் நீண்ட அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளார். “தேர்தலுக்காக பொதுமக்களைப் பிளவுபடுத்தி
பிப்ரவரி 15, 2024 தேசிய மற்றும் மாநில கட்சிகள் பலவும் கட்சி வளர்ச்சிக்கென நன்கொடைகள் பெற்றுக்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. பெரும் நிறுவனங்கள் இங்குள்ள கட்சிகளுக்கு அவ்வப்போது நிதிகளை தருவதும் குறிப்பாக தேர்தல்கள் நடைபெறும்போது நிறுவனத்தின் சார்பாக நன்கொடைகள் வழங்குவார்கள். அப்படி
ஆகஸ்ட் : 26, 2௦23 மத்திய அரசின் இந்தித் திணிப்பிற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்! தேசிய தொழில்நுட்ப கழக பணி நியமன அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல். துணைத் தலைவர் திரு. தங்கவேலு அவர்கள் அறிக்கை. தேசிய தொழில்நுட்பக் கழகக்
ஆகஸ்ட் 08, 2023 இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 3 மாதங்களாக இரு சமூகத்தினரிடையே நடந்த மோதல் குறித்து பல கட்டுரைகளில் தொடர்ச்சியாக எழுதி இருந்தோம். நாடெங்கிலும் இது குறித்து கவலையடைந்துள்ளனர். மதவாதத்தின் மொத்த உருவமாக ஆளும் கட்சி உருவெடுத்து நிற்கிறதோ
சென்னை : ஆகஸ்ட் 03, 2023 பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலமான மணிப்பூரில் இரு சாராருக்கும் ஏற்பட்ட மோதல் 80 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது இதனை கொஞ்சமும் சட்டை செய்யாமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வரும் ஆளும் மத்திய
சென்னை : ஆகஸ்ட் ௦1, 2௦23 இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக அங்கே வாழும் இரண்டு சமூகத்தினரிடையே எழுந்த மோதலால் பெரும் கலவரங்களுக்கு இரையாகிப் போனது. கடந்த மே மாதத்தில் ஓர் நாள் சிறுபான்மை
ஜூலை 25, 2௦23 பற்றி எரியுது மணிப்பூர். இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இரண்டு சமூகத்தினரிடையே தொடங்கிய மோதல் சுமார் எழுபது நாட்களைக் கடந்தும் தொடர்கிறது. ஏன் என அம்மாநிலத்தில் ஆளும் பாஜக தலைமையிலான அரசை நோக்கி எந்தக்
கோவை – ஜூலை 17, 2023 கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பிஜேபி யை சேர்ந்த திருமதி வானதி ஸ்ரீநிவாசன் தொகுதியில் எந்த திட்டங்களையும் சரிவர நிறைவேற்றித் தரவில்லை என பொதுமக்களிடமிருந்து எழுந்த ஆதங்கம் குறித்து அறிந்த மக்கள் நீதி
கோவை : ஜூலை 13, 2௦23 கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பாக, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி.வானதி சீனிவாசன் அவர்கள் 2021 தேர்தலில், தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து, வருகின்ற 16ம் தேதி
ராசிபுரம் : ஜூன் 20, 2023 நாமக்கல் நிழக்கு மாவட்டம் ராசிபுரத்தில் மக்கள் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுக்கூட்டம் சிறப்பாக நடத்தப்பட்டது. துனைத்தலைவர்களான திரு மௌரியா அவர்களும் மற்றும் திரு தங்கவேலு அவர்களும் தலைமை தாங்கினர். மாநில இளைஞரணி செயலாளரான
ஜூன் ௦9, 2௦23 இம்மாதம் (ஜூன் ௦2) இந்தியா டுடே நடத்திய சௌத் கான்க்ளேவ் 2௦23 கருத்தரங்கம் பல அரசியல் தலிவர்கள் மற்றும் பல துறை வல்லுனர்கள் பங்கேற்ற சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளாராக பங்கு கொண்ட மக்கள் நீதி
மே 27, 2௦23 உலக திரையுலக வரலாற்றில் இந்தியத் திரையுலகில் மிக முக்கியமான பங்களிப்பை தந்து பெரும் பங்காற்றி வருவது தமிழ்த் திரையுலகம் என அனைவரும் அறிந்ததே. இதில் குறிப்பிடத்தக்கது யாதெனில் நூற்றாண்டுகள் கண்ட தமிழ்த் திரையுலகில் சுமார் 6 வயது
மே 27, 2௦23 புது தில்லியில் ஒருங்கிணைக்கப்பட்ட பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நாளை (28.05.2023) சனிக்கிழமை மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடக்கவிருக்கிறது. இதனிடையில் இவ்விழாவிற்கு மாண்புமிகு இந்திய குடியரசு தலைவர்
புது தில்லி : மே ௦3, 2௦23 பேட்டி பச்சாவ் (பெண்களைப் காப்போம்) எனும் கோஷத்தை ஒவ்வொரு மேடையிலும் முழங்குகிறார் நமது இந்தியாவின் பிரதமர் மோடி. ஆனால் சொல் வேறு அவருடைய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான பிரிஜ் பூசன் சரண்சிங் இன்
ஏப்ரல் 20, 2023 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள். தேர்தல் பிரச்சாரம் செய்ய ஆகாய மார்க்கமாக ஹெலிகாப்டரில் பயணம் செய்து கோவை சென்றடைந்தார்.
தமிழ்நாடு : ஏப்ரல் 11, 2023 தமிழ்நாட்டின் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தமது பொறுப்பை உணராமல் பல மசோதாக்களை உடனடியாக ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது மரபிற்கு முரணானது. ஒரு கட்சியின் அங்கத்தினர் போல் சொந்த விருப்புடன் செயல்படுவது அரசியல் சாசன விதிகளுக்கு
சென்னை : ஏப்ரல் ௦9, 2௦23 மாநில அரசின் இறையாண்மைக்கு எதிராகப் பேசி அறைகூவல் விடுக்கும் ஆளுநர்.ஆர்.என்.ரவி அவர்கள் பதவியில் நீடிக்கக் கூடாது ! – மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் திரு மௌரியா அவர்கள் அறிக்கை ! ஒருங்கிணைந்த மாநிலங்கள்