சென்னை – ஜனவரி 15, 2௦23
தமிழரின் தொன்மை நிறைந்த வாழ்வில் பல பண்டிகைகள் வெகுவாக மனதினை கொள்ளை கொள்ளச் செய்து விடும்.
பண்டிகைகளில் மிக முக்கியமானது தை மாதம் முதல் நாளன்று உலகம் முழுக்க நிறைந்துள்ள தமிழ் மக்கள் கொண்டாடும் பொங்கல் திருநாட்கள் ஆகும்.
அதனையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் உலக மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் கொண்டாட்ட மனநிலையில் தமிழ்நாடே ததும்பிக் கொண்டிருக்கிறது. சூரியனை, கால்நடைச் செல்வத்தை, வேளாண்மை அறிவைக் கொண்டாடும் பொங்கல் நாளுக்காக அனைவரையும் வாழ்த்துகிறேன். – திரு கமல்ஹாசன்
