சென்னை : ஏப்ரல் ௦9, 2௦23
மாநில அரசின் இறையாண்மைக்கு எதிராகப் பேசி அறைகூவல் விடுக்கும் ஆளுநர்.ஆர்.என்.ரவி அவர்கள் பதவியில் நீடிக்கக் கூடாது ! – மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் திரு மௌரியா அவர்கள் அறிக்கை !
ஒருங்கிணைந்த மாநிலங்கள் அமையபெற்ற நாடு நம் இந்தியா. ஒவ்வொரு மாநிலங்களில் நடைபெறும் ஆட்சி குறித்து அதன் சட்ட திட்டங்கள் குறித்து ஆளுநரின் ஒப்புகையுடன் நடைபெறும் என்பது ஜனநாயகம் மற்றும் குடியரசின் மாண்பு. குறிப்பாக அந்தந்த மாநிலங்கள் வரலாறுகள் திரிக்கப்படாமல் இருப்பதும் அல்லது அவற்றை மறைக்காமல் இருப்பதும் வெகு முக்கியமானது. ஆயினும் மத்திய ஆளும் அரசு ஆட்டுவிக்கும் பொம்மையாக தமிழ்நாட்டின் ஆளுநர் விளங்கி வருகிறார் என்பது அவரின் பேச்சுக்களில் தெளிவாகத் தெரிகிறது. அவர் பங்குகொள்ளும் நிகழ்ச்சிகளில் பேசுபோருள்கள் ஒவ்வொரு முறையும் சர்ச்சையை கிளரச் செய்கிறது. எனவே அவர் அவசியமின்றி பேசுவது மட்டுமில்லாமல் தனது பொறுப்பினை உணர்ந்து அதற்கேற்றவாறு மாண்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் ஆனால் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் மனதிற்கு பட்டதை பேசுவேன் என்று எந்த கட்டத்திற்கும் செல்வேன் எனும் பொருள்படும்படி இருப்பதால் மேலும் மாநில அரசுடன் குறைந்தபட்ச இணக்கம் இல்லாமல் ஆளுநர் பதவியில் நீடிப்பது அவசியமற்றது என்றும் உடனடியாக அவர் பதவி விலகுவதே சாலச்சிறந்தது என்றும் மக்கள் நீதி மய்யம் தனது கருத்தை ஆழமாக முன்வைக்கிறது.



“மாநில அரசு அனுப்பும் தீர்மானங்கள் நிலுவையில் இருக்கிறதென்றால், அவற்றுக்கு ஒப்புதல் வழங்கவில்லை என்று அர்த்தம்” என்று ஆளுநர் பேசியிருப்பதை, சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. – மக்கள் நீதி மய்யம் சமூக ஊடக பிரிவு
