சென்னை : மார்ச் 17, 2௦23
மக்கள் நீதி மய்யம் தலைவரின் அறிவுறுத்தல்படி கடந்த சில மாதங்களாக இணையதளம் வழியாக பல துறை பிரமுகர்கள் பங்குகொள்ளும் கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் சனிக்கிழமை அன்று (18.03.2023) மாலை 5 மணியளவில் பிரபல உளவியலாளர் திருமதி அனிஷா ரபி அவர்கள் “அரசியல் நாகரிகம் – உளவியல் பார்வை” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றவிருக்கிறார். மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் பலரும் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தலைவர் நம்மவர்
தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, துணைத் தலைவர்கள் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பயிற்சி பட்டறை இந்த வாரம் “அரசியல் நாகரிகம்-உளவியல் பார்வை” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளவும் ! – மக்கள் நீதி மய்யம்

