விருதுநகர் செப்டெம்பர் 20, 2022
தமிழக அரசின் மின்சாரத்துறை அமைச்சகம் சமீபத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியது. அதனைச் சுட்டிக்காட்டிய பொதுமக்கள் கொரொனோ தொற்றின் காரணமாக உலகமெங்கும் நிலவிய மந்தமான பொருளாதார நிலை தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. பலருக்கு பணிபுரிந்து வந்த வேலைகள் இல்லாமல் போயிற்று. வணிகங்கள் என எல்லாமும் சிதிலமடைந்தது. கடந்த 2021 இல் சட்டமன்ற தேர்தலில் இதனை காரணமாக சொல்லிய திமுக தாம் ஆட்சிக்கு வந்தாலும் கொரொனோ தொற்றின் தாக்கம் நீங்கி திடமான பொருளாதார நிலை நிலவும் வரையில் மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்ற வாக்குறுதியையும் மீறி தன்னிச்சையாக மின் கட்டணங்களை உயர்த்தியுள்ளது ஆளும் திமுக அரசு. அதற்கு சொல்லும் சாக்கு போக்கு காரணங்கள் எதையும் நாம் ஒப்புக்கொள்ள இயலாது.
எனவே மக்கள் நீதி மய்யம் தமது கண்டனங்களை முன் வைத்தது. அறிக்கைகள் வெளியிட்டது பல மாவட்டங்களில் நிர்வாகிகள் இணைந்து ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் என தொடர்ந்து நடத்தியது. அதன் தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்ட மய்யம் சார்பில் நிர்வாகிகள் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப்பெற வேண்டியும் திமுக அரசின் இரட்டை நாக்கு வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி பொதுமக்களை வஞ்சிக்கும் போக்கினை கண்டித்து அரிக்கேன் விளக்கை கைகளில் ஏந்திக் கொண்டு கோஷமிட்டு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
சிவகாசி, காமராஜர் சிலை முன்பாக மய்யத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் திரு காளிதாஸ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் திரு. பாலாஜி, கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. செல்வகுமார், விருதுநகர் மத்திய மாவட்ட நற்பணி அணி அமைப்பாளர் திரு. நாகராஜன், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





