புதுச்சேரி, ஆகஸ்ட் 23, 2022
2021 தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாக மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் மகளிர்க்கான உரிமைத்தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தார். இப்படி ஒரு திட்டத்தை இந்தியாவிலேயே இதுவரை எவரும் எந்தக்கட்சியும் அறிவித்தது இல்லை, எனவே அனைவரது பாராட்டையும் வெகுவாகப் பெற்றது இத்திட்டம். உடனே அதனை அப்படியே நகல் எடுத்த திமுக தனது வாக்குறுதியாக அறிவித்துக் கொண்டது. மே 2021 இல் ஆட்சியமைத்த திமுக அரசு 15 மாதங்களை கடந்தும் இதுவரை தெளிவான முடிவாக எதையும் சொல்லாமல் தகுதியானவர்களுக்கு அளிக்கப்படும் என்று ஓர் நிபந்தனையை விதித்துள்ளது அதையும் இன்னும் கொடுத்தபாடில்லை. இப்படி சொன்னது எதையும் செய்து தராமல் சம்பந்தமே இல்லாமல் சாக்கு போக்கு சொல்லிக்கொண்டிருக்கும் தமிழக அரசினை ஓர் எதிர்க்கட்சியினை போல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது மக்களுக்கான அரசியல் களத்தில் தொடர்ந்து நிற்கும் மக்கள் நீதி மய்யம்.
இதனை தற்போது நமது தமிழகத்தின் அருகில் உள்ள யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆட்சியில் உள்ள என்ஆர் காங்கிரஸ் அரசு குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவியாக அளிக்கப்படும் என்று அறிவித்து இருப்பது கண்டு மகிழ்ச்சியுறுகிறது ம.நீ.ம மேலும் இத்திட்டத்திற்கு உளமார வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது
