நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. இது சம்பந்தமாக விழிப்புணர்வு செயல்கள் அச்சிட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு மாவட்ட செயலாளர் காமராஜ் ஆலோசனையின் கீழ் மாவட்ட துணை செயலாளர் தலைமையில் விநியோகித்த மய்யம் நிர்வாகிகள்.
அதில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் மழைநீர் வடிகால் மற்றும் அதன் அருகில் குப்பைகளை, கழிவுகளை கொட்டக் கூடாது என்றும் குழந்தைகளை மின் கம்பங்கள் அருகில் அமரவோ விளையாடவும் அனுமதிக்காதீர்கள் என்றும் கூறப்பட்டது.
ஈரக்கைகளை கொண்டு மின் சாதனங்களை கையாளுதல், காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளதால் அதில் குளிப்பது துணி துவைப்பது கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.