DRA என்ற அமைப்புடன் சென்னை மாநகராட்சி இணைந்து 2016ல் இருந்து மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை ரசிக்க மெரினா கடற்கரையில் தற்காலிக பாதை அமைத்து விழாவாக கொண்டாடுகிறது. இதற்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வது அபத்தம். முதலில் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!

பலரும் கூறுவது போல இது திமுக கொண்டு வந்த திட்டமா?

இல்லை. 2016ல் இருந்து Disability Rights Alliance என்ற அமைப்பு சென்னை மாநகராட்சியுடன் இணைந்து இந்த தற்காலிக முன்னெடுப்பை ஆண்டுதோறும் எடுத்துள்ளது. 2020ஆம் ஆண்டு கோரோனா காரணமாக நடத்தப்படவில்லை.

2021ஆம் ஆண்டு தான் இந்த நிகழ்ச்சி முதலில் நடத்தப்பட்டதா?

இல்லை. 2016ஆம் ஆண்டிலிருந்தே டிசம்பர் மாதம் சில நாட்கள் தற்காலிகமாக பாதை அமைக்கப்பட்டு நிகழ்ச்சி நடந்துள்ளது. உதாரணமாக 2018ல் வந்த செய்தி

https://timesofindia.indiatimes.com/city/chennai/civic-body-makes-marina-accessible-for-disabled/articleshow/72355676.cms

https://timesofindia.indiatimes.com/city/chennai/accessible-marina-on-international-day-of-disabled-persons-2019/articleshow/72349436.cms

https://www.mylaporetimes.com/2019/11/chennai-corporation-procures-beach-wheelchairs-for-differently-abled/

https://www.thehindu.com/news/cities/chennai/across-marina-beach-in-a-wheelchair/article25689815.ece

https://indianexpress.com/article/cities/chennai/chennais-marina-beach-accessible-to-differently-abled-for-a-week-7692759/lite/

மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை நிரந்தரமானதா?

இந்த ஆண்டு போடப்பட்டிருப்பதும் தற்காலிக பாதை தான். ஆனால் தமிழக அரசு நிரந்தர பாதை அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டம் என்ன ஆனது?

http://newzhook.com/story/chennai-marina-beach-accessibility-disabled/

https://www.livechennai.com/detailnews.asp?newsid=52159

மாற்றுத் திறனாளிகளுக்கு எப்போதும் துணை நிற்கும் மக்கள் நீதி மய்யம் என்பதற்கு சான்றாக அவர்களின் தேவையை பற்றி ஏற்கனவே விரிவாக பேசியுள்ளது மற்றும் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளது. அதைப் பற்றிய விவரங்களை கீழே உள்ள லிங்கில் பார்க்கலாம்.

https://maiatamizhargal.com/2021/12/differently-abled-protest/