திருவொற்றியூர் – சென்னை ஜனவரி 28, 2022

ஆளும் திமுக அரசின் திருவொற்றியூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆன கே.பி.ஷங்கர், திருவோற்றியூரின் நடராசன் கார்டன் எனும் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு சென்னை பெருநகர மாநகராட்சியின் துணைப் பொறியாளர் ஒருவரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, அதன் காரணமாக தனது கட்சியின் திருவொற்றியூர் மேற்குப் பகுதி கழகச் செயலாளர் பொறுப்பை பலி கொடுத்துள்ளார் அதன் விவரம் தான் நீங்கள் தொடர்ந்து காணப்போவது.

https://news.abplive.com/tamil-nadu/dmk-mla-kp-shankar-relieved-from-party-post-after-corporation-asst-engineer-alleges-manhandling-by-mla-aides-1509322/amp

சென்னைப் பெருநகர மாநகராட்சி சுமார் 3 கோடி ரூபாய்கள் மதிப்பீட்டில் நடராஜன் கார்டன் எனும் பகுதியில் முறையே ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாவது தெருக்களில் தார்ச்சாலைகள் அமைத்திட டெண்டர் விடப்பட்டு அதற்கான பணிகளை மதியம் 1.30 மணி வாக்கில் துவக்க வேண்டி நேரத்தில் அங்கே வந்த கே.பி.ஷங்கர் தன்னுடன் நான்கு நபர்களுடன் இணைந்து தார்ச்சாலைகள் போடும் பணியை நிறுத்தச்சொல்லியும் அங்குள்ள பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார், இதனையறிந்து அங்கே வந்து சேர்ந்த மாகராட்சி உதவிப் பொறியாளர் இந்தப் பிரச்சினையை காரணமறிந்து சமாதானம் செய்து வைக்க வந்தவரை தாக்கிய எம்.எல்.எ மேலும் அங்கு சாலைகள் போடுவதற்கு தார் கலக்கப்பட்ட சல்லிகளைச் சுமந்து நின்று கொண்டிருந்த 13 லாரிகளை திரும்பச் செல்லுமாறு வற்புறுத்தியது தெரிய வருகிறது.

திடீரென தான் தாக்கப்பட்டது குறித்து அதிர்ச்சியும் அச்சமும் அடைந்த அந்த உதவிப் பொறியாளர் வியாழன் அன்று பணி விடுப்பு எடுத்துகொண்டதையடுத்து பேசியவர் நேற்று ஷங்கர் மிகவும் கோபமுற்று இருந்தார் அங்கிருந்த மாநகராட்சி அமர்த்திய ஒப்பந்ததாரரிடம் சத்தம்போட்டு பணிகளை நிறுத்தச்சொல்லி வாக்குவாதம் செய்தார். தகவலறிந்து அங்கே சென்ற என்னையும் அங்கிருந்த பணியாளர்களையும் அவரும் அவருடன் வந்திருந்த அந்த அனபர்களும் உடன் சேர்ந்து தாக்கவும் துவங்கினர். இதை கண்டு அச்சமுற்று இருந்த நாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் எனது மேலதிகாரிகளுக்கு இங்கு நடந்தவற்றை தெரிவித்தேன், பின்பு அங்கிருந்து நான் வந்துவிட்டேன். பின்னர் ஷங்கர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த நிகழ்வுகளுக்கு மன்னித்து விடும்படி கேட்டுக் கொண்டார் மேலும் அங்கு நிறுத்தப்பட்ட பணிகளை மீண்டும் தொடருமாறு கேட்டுக் கொண்டார் இதற்கான காரண காரியம் என்னவென்று தனக்கு ஏதும் தெரியாது” என செய்தியாளரிடம் கூறினார்.

இந்தச் சம்பவம் பற்றி அறிந்துகொள்ள டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் எம்எல்எ கே.பி.ஷங்கரை தொடர்பு கொண்டபோது “நானும் என்னுடன் வந்திருந்தவர்கள் யாரும் அங்கிருந்த உதவிப் பொறியாளரையோ அல்லது அங்கிருக்கும் பணியாளர்கள் எவரையும் தாக்கவில்லை எனவும் நான் அங்கே முன்பே போடப்பட்டிருந்த சாலையை பெயர்த்து எடுக்காததை சுட்டிக் காட்டி மற்றும் சாலைகள் போடப்படவேண்டிய வழிமுறைகளை பின்பற்ற கேட்டுக்கொண்டோமே தவிர என்னுடன் வந்தவர்களுக்கும் ஒப்பந்ததாரர்களுடன் என்ன பிரச்சினை என்று எனக்கு தெரியவில்லை அங்கே நான் இருக்கவில்லை எனவும் கூறியவர் மேலும் இந்த பணிகளை மேற்கொண்டு செய்திட நான் லஞ்சமாகவோ அல்லது கமிஷனோ கேட்பதாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கு எந்த முகாந்திரமும் இல்லை எனவும் அதில் உண்மையும் இல்லை எனவும் கூறினார்.

டெயில் பீஸ் : மேலும் இவர் கடந்த 2006 இல் நடந்த ஒரு கொலையில் தொடர்பிருப்பதாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தால் 2011 இல் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராக தேர்வு பெற்றமைக்கும் துணை மேயர் தேர்விற்கு ஓட்டளிக்கவும் அப்போதைய நீதிபதி மாண்புமிகு ஜஸ்டிஸ் பழனிவேலு அவர்கள் சிறைச்சாலை சூப்பரின்டெண்டென்ட் ஒருவர் கே.பி.ஷங்கரை அழைத்துச்சென்று வாக்களிப்பு முடிந்ததும் அதே நாளில் மீண்டும் சிறைக்கு அழைத்து வரவேண்டும் என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

https://www.newindianexpress.com/cities/chennai/2011/oct/29/from-jail-to-council-304650.html