ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர்ப் பகுதியில் சுமார் 4000 குடும்பங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் நிலையில் திடீரென அவர்களை அங்கிருந்து அகற்ற ஆளும் திமுக அரசு தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது.

அந்த மக்களின் அன்றாடம் படும் அவஸ்தையை உணர்ந்து மக்கள் நீதி மய்யம் தீர்வு காணும் முனைப்பில் மாநிலச் செயலாளர் திரு செந்தில் ஆறுமுகம் இங்கு பல நாட்களாக வாழும் மக்களை சந்தித்து அனைத்து தகவல்களையும் மற்றும் அவர்கள் படும் இன்னல்களையும் கேட்டறிந்தார். அதன் காணொளிகளை இங்கே இணைத்துள்ளோம்.

அவர்கள் தேவையும் படும் இன்னல்களையும் அறிந்து கொண்ட தலைவர் திரு கமலஹாசன் அவர்கள், இன்று இதற்கு நிரந்தர தீர்வாக பட்டா வழங்கிட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

அதேபோல் மாநில ஊடகப்பிரிவு செயலாளர் திரு முரளி அப்பாஸ் அவர்களும் நியூஸ் 18 விவாத நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக ஆண்ட கழகங்கள் எவ்வளவு வாக்குறுதிகள் அளித்துள்ளன என்பது நிதர்சனம். தீர்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.

உடனடியாக இதற்கு ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும் என்பது மக்கள் நீதி மய்யம் வைக்கும் கோரிக்கை.

பல்வேறு நாளிதழ்களில் வந்த செய்திகள் உங்கள் பார்வைக்கு.

https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-district-chennai-echampakkam-public-protest-issue-hrp-675011.html

https://www.dailythanthi.com/News/State/2022/01/27225212/Government-of-Tamil-Nadu-should-issue-a-bandh-to-the.vpf

https://tamil.abplive.com/news/chennai/tn-govt-issue-bandh-to-the-people-of-injambakkam-bethel-nagar-kamalhasan-demand-37351

28-Jan-2022

பெத்தேல் நகர் மக்களுக்கு உரிய பட்டா வழங்க ஆவன செய்யவேண்டும் என்று நம் தலைவர் வலியுறுத்தியதை அடுத்து, போராடிவரும் மக்களை மாநிலச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம் நேரில் சந்தித்து, மநீம -வின் ஆதரவை பதிவு செய்தார். இதில் அப்பகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மய்ய உறவுகள் உடனிருந்தனர்.