கோவை வடகிழக்கு மாவட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பாக மய்ய நிர்வாகிகளின் ஏற்பாட்டில் 73 வது குடியரசு தினத்தை முன்னிட்டு மிகச்சிறப்பாக நடத்தப்பட்ட முப்பெரும் விழாவின் தொகுப்பு.

இருகூர் பேரூராட்சியில் அமைந்துள்ள நமது மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் 73 வது குடியரசு தினத்தின் முக்கிய நிகழ்வாக நமது இந்திய தேசத்தின் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து நமது கட்சியின் மிக முக்கிய கொள்கைகளில் ஒன்றான சாதி மதமற்ற பிரிவினை இல்லாத சமத்துவம்காப்போம் என்றும் அதனை மாண்பு குலையாமல்காப்போம் எனவும், அதனைத் தொடர்ந்து தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் பின்தொடரும் காந்திய வழியான அஹிம்சையை முன்னெடுத்துப்பயணிப்போம் எனவும் உளமார உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.

இருகூர் பேரூராட்சியில் அமையப்பெற்ற நமது இந்திய தேசபிதா மகாத்மா காந்தி அடிகள் அவர்களின் திருவுருவச்சிலைக்கு 73 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கோவை விமான நிலையம் அருகில உள்ள முக்கியசாலைகள் இணையும் சந்திப்பில் (ஜங்க்ஷன்) உயர்ந்து நிற்கும் நமது மய்யம் கட்சிக் கொடியினை பெரிய அளவிலான ஒன்றாக தேர்வு செய்து அதனை ஓர் நேர்மையான தலைவரின் தலைமையில் இயங்கும் நமது மய்ய நிர்வாகிகள் புடை சூழ மிகுந்த பெருமிதத்துடன் வான் நோக்கி உயர்ந்திருந்த கொடிக்கம்பத்தில் இணைத்து பட்டொளி வீசிப் பறந்திடும் வகையில் ஏற்றி வைக்கப்பட்டது.

கோவை வடகிழக்கு மாவட்டச் செயலாளர் திரு மனோ ரம்யன், நற்பணி அமைப்பாளர் திரு  B ஜெயசுதன், மாவட்டத் துணைச்செயலாளர் திரு கேபிள் R செந்தில் குமார், சூலூர் ஒன்றிய செயலாளர்கள் திரு தனபால், திரு சரவண பெருமாள், சின்னியம்பாளையம் சேர்மராஜ், 6 வது வார்டு கிளைச் செயலாளர் கே.ஜெயராஜ் மற்றும் மய்யத்தமிழர்கள் செல்வா ஆகியோர் உடனிருந்து சிறப்பித்தனர்.

இம்மூன்று நிகழ்வையும் ஒன்றாக இணைந்து நின்று அதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்த மய்ய நிர்வாகிகள் அனைவருக்கும் பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்கிறது மய்யத்தமிழர்கள்.