ஈதல் இசைபட வாழ்தல் எனும் படியாக அப்போதிருந்தே தம் சிவந்த கரங்களால் அள்ளிக் கொடுக்கும் பல வள்ளல்கள் இருந்து கொண்டு தான் வருகிறார்கள்.

தனது துறையில் உழைக்கும் ஒருவரின் மகனின் நோய்ப்பிணி தீர அவர் கேட்காமலே கொடுத்தது பெரும் செயல் அதிலும் ஏன் என்னிடம் இதுவரை இப்படி ஒரு விஷயத்தை சொல்லவில்லை என்று உரிமையாக கடிந்து கொள்வது மனிதாபிமானத்தின் உச்சகட்டம்.

ஓர் படைப்பு அதன் படைப்பாளி தனது படைப்பை மிகச்சிறந்த வழியில் மக்களிடையே கொண்டு சேர்க்க தடையாக இருந்த சில லட்சங்கள் (இன்றைய தேதியில் அது பல கோடிகள் பெறும்) செலவு செய்து அப்படைப்பு குறையாக நில்லாமல் அந்த கதாநாயகனை இருட்டடிக்கச் செய்ய நினையாமல் தக்க நேரத்தில் அதற்கான தகுந்த உதவிகளை செய்து தந்து வரலாற்றில் அதற்கான பக்கத்தில் தன்னையும் அறியாமல் இடம்பெற்ற மாண்பை சொல்லி சொல்லி பெருமை கொள்கிறார் தமிழக திரையுலகின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான திரு மகேந்திரன் அவர்கள்.

அதுவுமில்லாமல் தன்னுடன் தனக்கு மகளாக நடித்த பெண் பிள்ளையின் பொருளாதார தேவையுணர்ந்து அதையும் செய்து தந்தவர் நம்மவர். அதற்கு அந்த பெண் பிள்ளை நம்மவர் எனக்கு ஓர் தந்தையின் இடத்தில இருந்து இப்பேருதவியை செய்து தந்தார் நான் அவரின் பெறாத மகளாக பெருமிதம் அடைகிறேன் என்று கண்ணீர் மல்க சொல்கிறார்.

மூன்றும் வெவ்வேறு காலகட்டங்கள் வெவ்வேறு விதமான பொருளாதார தேவைகள் ஆனால் எதையும் அவர்கள் கேட்காமலே செய்து தந்தவர் நம்மவர் கமல்ஹாசன் அவர்கள். அதுவும் ஓர் விளம்பரமும் இன்றி அதையும் வேறு வேறு இடங்களில் அவ்வுதவியை பெற்றவர்கள் எந்த நிர்பந்தமும் இன்றி தமது உளமார நேசிக்கும் ஓர் உன்னத மனிதரின் கொடுக்கும் தன்மையை சொல்லி நிற்கிறார்கள்.

ஈதல் இசைபட வாழ்தல் இதுவே.

இம் மூன்று மட்டுமல்ல இவரின் கொடைத்தன்மை பறை சாற்றுவது இன்னும் பெரும் பட்டியல் உண்டு.

https://youtu.be/OnAgmIHBDPM
https://youtu.be/OnAgmIHBDPM