கோவை ஜனவரி 12, 2022

கோவை மாவட்டம் காந்தி மாநகர் உயர்நிலைப்பள்ளி கட்டிடங்கள் முழுதும் வண்ணம் பூசப்பட்டு இன்றைக்கு பொலிவுடன் இருக்கக் காரணம் மக்கள் நீதி மய்யம் கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆவர்.

நற்பணி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வந்ததும் அங்கே என்ன தேவைகள் என்று அறிந்து கொள்ளவும் அறிந்து கொண்டதை புரிந்து கொள்ளவும் புரிந்து கொண்டதை நிறைவேற்றியும் தருவதே எங்கள் பணி என்பதாக சொன்னதை செயலில் காண்பிக்கும் மய்யதார்கள் என்றும் போற்றுதலுக்கு உரியவர்கள்.

சாதாரண நற்பணி என்றாலே முதல் ஆளாக வந்து நிற்கும் மய்யம் உறவுகள் சோகையுடன் கேட்பாரின்றி வண்ணங்கள் மங்கி காணப்படும் பள்ளிக்கூடம் ஒன்றிற்கு வந்து பயிலும் மாணவர்கள் நல்ல எண்ணத்துடன் மென்மேலும் தன்னம்பிக்கையுடன் மலர்ந்த முகத்துடன் ஒளிமயமான கல்வி கற்றிட வெளிச்சமான சூழல் வேண்டி கட்டிடங்களுக்கு வண்ணம் பூசிதரும்படி வந்த வேண்டுகோளை உடனடியாக ஏற்று தகுந்தவாறு பள்ளிக் கட்டிடத்திற்கு வண்ணம் பூசித் தந்தனர்.

அதற்கான நன்றி அறிவித்தலை சிறு விழாவாக நினைவில் நிறுத்திக்கொள்ள நமது மய்யம் மாநில செயலாளர்களையும், அமைப்பாளர் மற்றும் நிர்வாகிகள் ஆகியோரை அழைத்து அவர்களின் நற்பணியை அன்பு பாராட்டி நன்றிகள் கூறி வாழ்த்துகளையும் தெரிவித்தனர் பள்ளி ஆசிரியர் பெருமக்கள் மற்றும் பெற்றோர்கள் சங்கம் வாயிலாக இந்த நன்றி அறிவிப்பினை உள்ளன்போடு அளித்தனர்.

இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த மக்கள் நீதி மய்யம் மாநில கொள்கைபரப்புச் செயலாளர் திருமதி டாக்டர் அனுஷா ரவி அவர்கள், மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் மாநில செயலாளர் திருமதி மூகாம்பிகை ரத்தினம் அவர்கள், கோவை மண்டல அமைப்பாளர் திரு ரங்கநாதன் அவர்கள் உடன் மேலும் அனைத்து நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.