திருச்சி பிப்ரவரி 11, 2022

எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற கணக்கில் என்னவெல்லாம் கைகளில் வருகிறதோ அவற்றை எல்லாம் (அவங்க ஸ்டைலில் சொன்னால் ராஜதந்திரம் 😆) பகீரத முயற்சி எடுத்து தமிழகத்தில் தாமரையை அந்த காவி வர்ணம் சனாதன அரசியலை பரப்பியே தீரும் நோக்கில் பிஜேபி யின் தமிழக தலைவர் அண்ணாமலை (முன்னாள் ஐ பி எஸ்) வெகு சுறுசுறுப்பாக இயங்கி வருவது அனைவரும் அறிந்ததே.

ஆனால் அதை அடித்து நொறுக்கி போடும் வல்லமை கொண்டவர்கள் பிஜேபி யின் மாவட்ட நிர்வாகிகள்.

திருச்சி மாவட்டம் பாலக்கரை பகுதி அருகே உள்ளாட்சி தேர்தல் முன்னிட்டு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் அவ்வழியாக சென்ற வாகனங்களை சோதனை செய்தபோது அங்கே இருசக்கர வாகனத்தில் செந்தில் குமார் கொண்டு வந்ததால் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை வகையை சேர்ந்த போதை தரக்கூடிய குட்கா மற்றும் புகையிலை போன்றவற்றை 4 கிலோ எடை கொண்டவையாக இருக்கும் என்று தெரியவந்தது.

மேற்கொண்டு நடந்த விசாரணையில் கடத்தி வந்தவர் ஓ. கிருஷ்ணபுரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த பெரியசாமியின் மகனும், பிஜேபி யின் திருச்சி புறநகர் பகுதியின் மாவட்டச் செயலாளர் ஆவார்.
அந்த பொருட்களை கைப்பற்றி செந்தில் குமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து அவரை துறையூர் காவல் துறையினர் வசம் ஒப்படைத்தனர்.
வாய் முழுதும் மதம் பற்றிய சிந்தனை கொண்டிருக்கும் பாஜகா வினர் இப்படி போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபடுவது அக்கட்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாக காரில் போதை பொருட்களை கடத்திய மற்றொரு பிஜேபி பிரமுகர் ஒருவர் கைதானது குறிப்பிடத்தக்கது.

இப்படியாக காவியின் மேல் படிகிறது குற்றக்கறைகள்.