திரைப்படம் பேசினால்அரசியல் தெரியாதோ என்பீர்!
அரசியல் பேசினால் ஆறடி தள்ளி நிற்பீர்!
மொழிப்பற்று கொண்டால் ஆங்கிலம் புரியாதோ என்பீர்!
ஆங்கிலம் பேசினால் படித்த திமிர் என்பீர்!
பகுத்தறிவு பேசினால் கடவுள் பிடிக்காதா என்பீர்!
கடவுள் நம்பிக்கை கொண்டால் கர்னாடகம் என்பீர்!
சகோதரத்துவம் சொன்னால் நீங்கள் கம்யூனிஸ்டா என்பீர்!
ஜனநாயகம் பேசினால் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்பீர்!
காதல் பிடிக்காதென்றால் ஆண்மையில் ஐயம் கொள்வீர்!
காமம் பற்றி பேசினால் காதுகளைப் பொத்திக்கொள்வீர்!
மெய்ஞ்ஞானம் பேசினால் விஞ்ஞானம் அறியீரோ என்பீர்!
விஞ்ஞானம் பேசினால் விலகித் தள்ளி நிற்பீர்!
ஓடி ஓடி உழைத்தாலும் பணத்தாசை பிடித்தவன்!
பொருள் வேண்டாமென்றாலும் பிழைக்கத் தெரியாதவன் !
எதிர்த்துப் பேசினால் அதிகப்பிரசங்கி!
பேசாமலிருந்தால் கல்லுளிமங்கன்!
எத்தனை கடினம் இவ்வுலகில் நான் நானாய் வாழ்வதில்…..!!!

  • பத்மஸ்ரீ கமல்ஹாசன்
https://youtu.be/iVW9CAhogmk