சென்னை ஏப்ரல் 07, 2022

அது ஏன் என்று தெரியவில்லை ? எதற்காக இப்படி எல்லாம் செய்து வருகிறார்கள் என்றும் புரியவில்லை.

நாங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவற்றை செய்யவில்லை, உண்மையில் உயர்ந்து கொண்டே வரும் பெட்ரோல் விலையை கருத்தில் கொண்டு உழைக்கும் மகளிர் பயன்பெறும் வகையில் இதுவரை முந்தைய அதிமுக ஆட்சியில் அறிவித்து இருந்த ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை சென்ற ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக அரசு மேற்கண்ட அதீத கண்டுபிடிப்பை காரணம் காட்டி அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

இதற்கு முன்னர் அம்மையார் ஜெ அமல்படுத்தி இருந்தார். அவருடைய திட்டங்கள் முழுதாக மக்களுக்கு கிடைக்க பெற்றதா என இதுவரை தெரியாத புரியாத புதிராக தொடர்ந்து வருவது வருத்ததை தருகிறது.

இங்கே மகளிருக்கான ஸ்கூட்டி வாகனம் தருவதை மட்டுமல்ல வேறு எந்த இலவசமும் தருவதை மக்கள் நீதி மய்யம் ஒரு போதும் சரி என்று வாதம் செய்ததில்லை ஒப்புக்கொண்டதும் இல்லை மாறாக மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்பது தூய குடிநீர், மேம்பட்ட கல்வி மற்றும் சிறந்த மருத்துவம் போன்றவைகள் எல்லாம் சிறப்பாக தந்திட வேண்டும் என்பதே.

நாளை நமதே!