சென்னை மே 11, 2022

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் 22 நாட்கள் நடைபெற்றது, நடைபெற்ற கூட்டத்தொடரில் 22 மசோதாக்களின் நிறைவேற்றத்தோடு முழுமையாக இல்லாவிடினும் பகுதிகளாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது ஓரளவிற்கு மகிழ்ச்சியே எனினும் அடுத்து வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடர்களை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் என்றோம் மேலும் ஆளும் திமுக 2021 இல் நடந்த தேர்தல் பரப்புரையின் போது தங்கள் வாக்குறுதியாக (எண்: 376) குறைந்தபட்சம் ஒவ்வொரு வருடமும் 100 நாட்களாவது சட்டமன்ற கூட்டத்தொடர்கள் நடைபெறும் என்பதே. அதை நிச்சயம் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறது மக்கள் நீதி மய்யம்.