இந்தியா ஜூன் 17, 2022

ஒரே பொய்யை இன்னும் எத்தனை காலங்களுக்கு பேசித் திரிவார்களோ இந்த போலி பிம்பங்களை கட்டமைக்கும் அரசியல் கட்சிகளை கொண்ட சில தலைவர்கள்.

தெருத் தெருவாய் கூட்டுவது சுயநலத் தொண்டு, ஊரார் படம் பிடிக்க கூட்டுவதில் சுயநலம் உண்டு // என்ற பாடலே இதற்கு சாட்சி.

மக்களுக்கு உண்மையில் நன்மையைத் தரும் பொதுநலத் திட்டங்களை நம்பி இந்த ஆட்சியாளர்களே இல்லை என்பதாக மட்டுமே புரிகிறது.

தலைவர் கமல் ஹாசன் அவர்கள் நடித்து இருந்த படம் நம்மவர். கல்லூரி மாணவர்களிடையே நிலவி வரும் நட்புறவு, ஆண் பெண் என இருபாலரும் எந்த முரண்களும் இன்றி பழகுதல், கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் புரிதல் ஒழுங்குமுறை போன்றவையும் போதித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக போதை வஸ்து புழக்கத்தை அது கல்லூரி மாணவ மாணவியரிடையே பெருகி வரும் அபாயத்தையும் சொல்ல மறக்கவில்லை. அந்த படத்தில் ஓர் பாடல் சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள சுத்தம் உள்ள வீடு தான் சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பை மேடு தான்

https://tamil.oneindia.com/news/delhi/among-180-nations-india-ranks-lowest-in-environmental-performance-index-461345.html

https://www.bbc.com/tamil/india-61790476

https://www.dinamani.com/india/2022/jun/09/last-on-the-environmental-performance-list-3858853.html

https://www.hindutamil.in/news/india/810881-india-is-last-in-environmental-performance-index-for-2022.html

மேலே உள்ள செய்தி நாளிதழ்களின் தரவுகள் உங்களுக்கு அடிவயிற்றில் பல பகீர் பீதிகளை கிளப்பும். சென்ற ஆண்டுகளில் இருந்த சுற்றுச்சூழல் எந்த முன்னேற்றமும் இல்லாமல் போனாலும் கூட அதைவிட இன்னும் மோசமாக படுபாதாளைத்தை நோக்கி செல்வது நாம் இப்பூமியில் வாழ்வது எவ்வளவு கடினமாக இருக்கக்கூடும் என்பதை அப்பட்டமாக பறைசாற்றுகிறது. கடந்த நூற்றாண்டுகளில் நம் மூத்தோர்களின் வாழ்வியல் முறைகள் அவ்வளவு தூய்மையானதாக இருந்துள்ளதற்கு எடுத்துக்காட்டாக பருவம் தவறாமல் பெய்யும் மழை மற்றும் மிகச் சொற்பமான இயற்கைப் பேரிடர்களின் அதுவும் அவ்வளவாக பாதிப்பில்லாத ஒன்றாக இருந்தது. நாளாக நாளாக வளர்ச்சி பெரும் விஞ்ஞான தொழில்நுட்பம் அதில் உண்டாகும் சாதக பாதகங்கள் என்ன மாதிரியான குழப்பங்களையும் சிக்கல்களையும் உருவாக்கி வருகின்றன என்பதற்கு இன்றுவரை நடந்து வரும் போராட்டங்கள் எத்தனை எத்தனை.

நாட்டின் வளர்ச்சியில் முதல் பங்கு உணவு உற்பத்தி மற்றும் தொழில்துறை. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாக நடந்து முடிந்த விவசாயிகள் போராட்டமும் தொழிற்சாலைகள் வெளியிடும் மாசுகள் குறித்து அதன் தாக்கம் வீரியமும் சில தலைமுறைகளை அங்க குறைபாடுகளுடன் பிறத்தல், மலட்டுத்தன்மை, உயிர்கொல்லி நோயான புற்றுநோய் முதலான அபாயகரமான நோய்களையும் தோற்றுவிக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

விவசாயமும் பல காலங்களில் பொய்த்து போகிறது மழை பொழியாமல் வறட்சி ஏற்படுவதும் அல்லது அதற்கு நேர்மாறாக தேவைக்கு அதிகமான மழை பொழிந்து அதனால் உண்டாகும் வெள்ளபெருக்கு அந்த விவசாயத்தை முற்றிலும் சேதமாக்கிச் செல்வதும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது.

சரி இதெற்கெல்லாம் என்ன தீர்வு ? ஒரு நாட்டின் வளர்ச்சியடைந்தால் அந்நாட்டின் மக்களும் வளம் பெறுவார்கள் என்பது இயற்கையின் நியதி. அப்படி வளர்ச்சியடைந்த நாடுகள் எவை என்று நாம் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. அணுகுண்டுகள் போடப்பட்டு அழிக்கப்பட்ட ஜப்பான் அதற்கு முதல் உதாரணம் என்றே கொள்ளலாம். எப்படி அத்தகைய நாடுகள் சில அபார வளர்ச்சியை எட்டிப் பிடித்து விடுகிறது ? அங்கே விவசாயம் மதிக்கப்படுகிறது அதற்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. உணவு உற்பத்தியில் செயற்கை இல்லாமல் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருட்கள் தரமானவையும் கூட எங்கெல்லாம் இயற்கை விவசாயம் செழிப்பாக நடைபெறுகிறதோ அங்கெல்லாம் மண்வளம் முதற்கொண்டு இயற்கைவளங்கள் காக்கப்படுகின்றன என்பதே உண்மை.

எல்லோரும் விவயசாத்தில் ஈடுபட முடியாது எனும்போது தொழில்துறை அங்கே மேலோங்கத் துவங்கும். புதிதுபுதிதாக நிர்மானிக்கப்படுகிற தொழிற்சாலைகள் இயங்குகையில் அதன் உற்பத்தி திறன் உற்பத்திப் பொருட்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைக்கு ஏற்றுமதி செய்யபடுவதன் மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணி நாட்டின் வளர்ச்சிக்கு உதவிடும். அத்தகைய தொழிற்சாலைகள் இயங்கும் வழிமுறைகள் இயற்கைக்கு முரணாக இல்லாமல் நீர் நிலம் காற்று என இயற்கை வளங்கள் மாசுபடுவதை கண்காணித்து அதற்கான மாற்று ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அரசு துறைகள் உற்று நோக்கி முறையான அங்கீகாரம், வெளியாகும் கழிவுகள் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளுக்குட்பட்டு உள்ளத என்றும் அப்படி விதிகளை மீறும் பட்சத்தில் அத்தகைய தொழிற்சாலை நிறுவனங்களை சட்டரீதியான நடவடிக்கைகள் மூலம் நெறிமுறைப்படுத்த வேண்டும்.

எந்த கட்டுமானமும் இயற்கைக்கு மீறிய நிலவெளிகளில் நிர்மானிக்கப்படுவதை முற்றிலும் தடுக்க வேண்டும், அவை வசிக்கும் வீடுகளாகட்டும், தொழிற்கூடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள், இறை வழிபாட்டு தளங்கள் என எதுவாக இருப்பினும் முறையான வகையில் மட்டுமே இருப்பது முக்கியம்.

பெரும்பாலும் முழு வளர்ச்சியடைந்த பெரு நகரங்களில், டவுன்ஷிப்கள், தொழிற்பேட்டைகள் உள்ளிட்ட இடங்களில் உண்டாகும் கழிவுகள், குப்பை, கழிவுநீர் வழித்தடங்கள் என பலவற்றையும் முறையான வழியில் அகற்றுதல் சுத்தம் செய்தல் அப்படி அகற்றப்பட்ட கழிவுகளில் இருந்து மாற்று சக்திகளை உண்டாக்குதல் என்பதே முழு தீர்வு. ஆயினும் இதில் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் துறைகள் தங்களது பணியினை தங்கு தடையின்றி செய்து முடித்தலும் மக்களுக்கு தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அதற்குரிய மாற்று செயல்களை அறிமுகம் செய்து நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்வதை வலியுறுத்தியும் அதை முழுமூச்சாக செயல்படுத்தியும் வருவதே தகுந்த தீர்வாகும்.

180 நாடுகள் பட்டியலில் இந்தியா சுற்றுச்சூழலில் கடைசி இடத்தை பெற்று இருப்பது இத்தனை ஆண்டுகளாக மற்ற எல்லா வகையிலும் பிற நாடுகளுக்கு சவால் விடக்கூடிய வகையில் வளர்ந்து வந்திருந்தாலும் மக்களின் வாழ்வாதார அடிப்படையே சுத்தமான நீர் நிலம் காற்று என்பது மட்டுமே அவற்றை இதுவரை ஆட்சி செய்த அரசுகளும் ஆளும் அரசும் தரவியலாது போனால் எத்தகைய வளர்ச்சியினை பெற்று இருந்தாலும் அவை வழக்கொழிந்து போன செல்லாக்காசாக மட்டுமே கொள்ளப்படும்.

‘வரப்புயர நீர் உயரும்

நீர் உயர நெல் உயரும்

நெல் உயரக்குடி உயரும்

குடி உயரக் கோல் உயரும்

கோல் உயரக் கோன் உயர்வான்’

  • ஒளவையார்

ஒளவை மூதாட்டி சொன்னவை எல்லாம் இன்னும் ஏட்டளவே உள்ளது.

சுற்றுச்சூழல் தொடர்பாக சமீபத்தில் வெளியான இரண்டு அறிக்கைகள் அதிர்ச்சியளிக்கின்றன. யேல் மற்றும் கொலம்பியா பல்கலைகழகங்கள் இணைந்து அண்மையில் வெளியிட்ட சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு 2022 (Environmental Performance Index) 180 நாடுகள் வரிசையில் இந்தியா கடைசி நாடாக இடம்பெற்றுள்ளது குறித்து ஜூன் 16 2022 தேதியிட்ட நீண்ட அறிக்கையொன்றை மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ளது