சென்னை – ஜூலை-17, 2022

விக்ரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் படத்தின் வெற்றியில் வருவாயாக ஈட்டப்படும் தொகையில் நமது கட்சிக்கென குறிப்பிட்ட தொகையை அளிப்பேன் என்றார். அதன்படியே விக்ரம் திரைப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் கோலாகல வெற்றியை குவித்தது.

அதன்படியே சொல்லிய வண்ணம் செயல் என்பதாக தனது வருவாயான சொந்த பணத்தில் இருந்து கட்சியின் வளர்ச்சிக்கென 1.5 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்திருக்கிறார். “என்னால் இயன்றதை தந்துள்ளேன், உங்களால் இயன்றதை நீங்கள் செய்வீர்களானால் என் உள்ளம் சந்தோசம் கொள்ளும்”

“சென்னையின் பிரதான இடத்தில் தான் வாழ்ந்துவந்த வீட்டை,  கட்சிக்கு அலுவலகமாகக் கொடுத்தது, அலுவலக நிர்வாகச் செலவுகள், தேர்தல் செலவுகள் என கட்சிக்கான அத்தனை நிதிச்சுமையையும் இதுநாள்வரை தன் தோளில் சுமந்துவரும் நம் தலைவர் அவர்கள் தற்போது தன் வருமானத்தின் ஒரு பகுதியை கட்சி வளர்ச்சிக்காக நன்கொடையாக அளித்துள்ளார்.  அப்படி கட்சிக்கு நிதியாக அவர் கொடுப்பதாக அறிவித்தது ரூ 1.5கோடி.  இத்தனை பெரிய தொகையை நன்கொடையாகத் தருவதாக அறிவித்த தலைவர் கட்சி நிர்வாகிகள்,உறுப்பினர்கள், என் அரசியல் மேல் நம்பிக்கை கொண்டவர்கள் ஒவ்வொருவரும் இதுபோல்  தங்கள் வருமானத்தின் சிறுபகுதியை கட்சிக்கு நன்கொடையாக அளிக்க முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்”.