சென்னை ஜூலை 17, 2022

சென்னையில் இன்று காலை முதல் நடைபெற்ற மாநில, மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களுடனான கலந்தாலோசனை கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பல சிறப்புகள் நடைபெற்றது மாற்றுக் கட்சியினரான அதிமுகவில் இருந்து விலகிய 300 நிர்வாகிகள் தலைவர் முன்னிலையில் தங்களை மக்கள் நீதி மய்யத்தில் இணைத்துக் கொண்டதும், சேவை பெரும் உரிமைச் சட்டம் பிரச்சாரம் துவக்கமும், 100 பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களை நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் பகுதியான ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்கத்தில் மற்றும் மய்யத்தில் இணைத்துக் கொண்டதும், கட்சியின் வளர்ச்சி நிதியாக தலைவர் அவர்கள் ரூ.1.5 கோடியை அளித்தார். மேலும் தலைவர் அவர்களிடம் கட்சிக்கென நிதிகளை அளித்த நிர்வாகிகளுக்கும் நன்றி உரைத்தார் மட்டுமல்லாமல் அங்கே குழுமியிருந்த நிர்வாகிகள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் தெளிவாகவும் சிறப்பாகவும் பதிலளித்தார் மேலும் விரைவில் தமிழகம் முழுக்க தாம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விருப்பதாகவும் கட்சியின் கொள்கைகள் மக்களுக்கு சென்றடைய வேண்டுமானால் கட்சி வலுப்பெற வேண்டும் என்றும் அதற்குத் தக்க நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் நமது மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர்கள் திரு மௌரியா அவர்களும் திரு தங்கவேலு ஆகியோரும் தத்தமது உரையில் இந்நிகழ்வினை இரவுபகலாக உழைத்து திறம்பட செய்து முடித்த அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.